பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

بطقس

முரண்பட்டனவாகப் புலப்பட, அவற்றைத் திறனாய்வு செய்து பின் இணைப்பாக வைத்தும், 'தமிழர் வரலாறு மொழி பெயர்ப்பும் திறனாய்வும்' என்ற தலைப்பில், திருமாவளவன், "புலவர் வரிசை' 'அரசர் வரிசை' என்ற 23 நூல்களை வெளியிட்டு, 1951லேயே என்னையும் ஒர் எழுத்தாளனாகத், தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்துவைத்த பெருமைக்குரிய கழக வெளியீடாக, என் ஐம்பதாவது படைப்பாக வெளி யிட்டேன். - -

சங்க இலக்கியப் பாக்களின் தொகுப்புகளாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை வரிசையில், எ ட்டுத் தொகையில் சில நூல்களின் திறனாய்வு செய்து வெளி யிட்ட் எனக்கு அவ் வரிசையில் முதற்கண் வைத்துப் போற்றப்படும் பத்துப்பாட்டுப் பாக்களின் திறனாய்வும் செய்ய வேண்டும் என்ற வேட்கை எழுந்தது இயல்பே. அவ் வேட்கையால் உந்தப்பட்ட நான் 782 அடிமுதல் 103 அடிவரை உள்ள அவ்வரிசையுள், அடியளவால் சிறியதாய, முல்லைப் பாட்டினை' முதற்கண் திறனாய்வு செய்து, 'முல்லை' என்ற தலைப்பில், கழக வெளியீடாக வெளியிட முன் வந்துள்ளேன். என் படைப்புகளில் பெரும்பாலனவற்றை வெளியிட்ட இனியும் வெளியிட இருக்கும் கழகம், இந் நூலையும் வெளியிட முன் வந்தமைக்குக் கழகத்தினர்க்கும், அவர் தம் தலைவர். என் இனிய நண்பர். உயர் திரு. முத்துக் குமாரசுவாமி அவர்களுக்கும் என் நன்றிப் பெருக்கினைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். என் முந்தைய படைப்புகளுக்கு நல்லாதரவு தந்த, தந்துவரும தமிழ் கூறும் நல்லுலகம் 'முல்லை'யின் நறுமணத்தின்ையும் நுகர வேண்டுகின்றேன்.

அன்புள்ள, கா: கோவிந்தன்