பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு ல் ைல

--سسسحمولمبس سست۔

முல்லைப்பாட்டு.

ஒரு விளக்கம்

திரு முகாற்றுப்படை முதலாக, மலை படுகடாம் ஈறாக உள்ள பத்துப்பாட்டு என்னும் இலக்கிய வரிசை யில் ஆறாவதாக இடம் பெறுவது முல்லைப்பாட்டு, கூறிய பத்துப்பாக்களில் அடியளவால் இறுதியில் வைக்கப்படும் என்றாலும், அவற்றுள் அகத்தினைப் பொருள் பற்றிக் கூறும் நான் கனுள், முதற்கண் வைத் துப் பயிலப்படுவது.

ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற உயர்ந்த ஒழுக்க நெறியோடு வாழ்க்கையைத் தொடங்கு மிடத்துப் பிறந்த பேரின் பம், இத்தகையது எனப் பிறர்க்குப் புலனாக எடுத்துரைக்க மாட்டாததாய், அவ்விருவர் உள்ளத்து உணர்வே நுகர்ந்து மகிழ்தற்குரிய ஒரு பொருள் ஆதலின், அக்காத லின்ப வாழக்கையை அக ஒழுக்கம் என்றும், அவ்வின்ப வாழ்விற்குத் துணை நிற்கும் பொருளிட்டல், புகழிட்டல் போலும் செயல் களைப் புற ஒழுக்கம் என்றும் பழந்தமிழச் சான்றோர் வகுத்துக் காட்டினர் . .

அகத்திணைப் பொருள் பற்றிய செய்யுள் ஒவ் வொன்றும், முதல், கரு, உரி ஆகிய முப்பொருள்களை யும் உடையவாதல் வேண்டும். 'முதல், கரு, உரிப்