பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 - முல்லைப்பாட்டு

பொருள் என்ற மூன்றே நுவலுங்காலை முறை சிறந் தனவே' என்பது தொல்காப்பியம்.

முதல், கரு, உரி ஆகிய முப்பொருளும் இடம்பெற வேண்டும் என்ற விதிக்கு மாறாக, முதற்பொருள் இடம் பெறாதிருக்க வருவனவும், கருப்பொருள் இடம் பெறாது போக வருவனவும், முதற்பொருள், கருப் பொருள் ஆகிய இருபொருள்களும் இடம் பெறாதிருக்க வருவனவும், அகத்தினைச் செய்யுட்களாகவே மதிக்கம் படும் என்றாலும் அவை, முப்பொருளும் இடம்பெற வரும் செய்யுட்களைப் போலச் சிறப்புடையனவாக மதிக்கப்படமாட்டா.

முல்லைப்பாட்டு, அகத்தினைச் செய்யுட்களுக் குரிய முதல், கரு, உரி ஆகிய முப்பொருளையும் குறை வறக்கொண்டிருககும் பெருமைக்கு உரியதாகப் படைத் துள்ளார் புலவர், காவிரிப்பூம் பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார். .

திணைக்குரிய நிலம், பெரும்பொழுது, சிறு பொழுது ஆகிய இவை முதற் பொருள் எனப்படும். 'முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பு என மொழிப என்பது தொல்காப்பியம்.

காடும், காடுசார்ந்த பகுதியும் முல்லைக்குரிய நிலம். கார்காலமும், அக்காலத்து மாலையும், முறையே அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதும் சிறுபொழுதும் ஆம். மாயோன் மேய காடுறை உலகம்'; ' காரும் மாலையும் முல்லை' என்பன தொல்காப்பியம்.

'கான்யாறு தழி இய அகனெடும்புறவு (24) 1. கானம் ஒன்றிய நந்திய செந்நிலப் பெருவழி (91) முதிர்காய் வள்ளியங்காடு (101) என்ற வரிகளில் நிலமும்; எதிர்செல் வெண் மழை பொழியும் திங்கள்" (100) என்ற வரியில் பெரும்பொழுதும், பெரும் பெயல் பொழிந்த சிறுபுன் மாலை' (6) என்ற