பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 3 முல்லைப்பாட்டு

கிறுத்தி "மாலைக் காலத்துப் பாவை விளக்கு’ எனப் பெயரடையாகக் கொண்டிருப்பது தேவையற்ற இடமாற்றமாம். .

பதினேழாவது வரியில், ஆயர் மகள் 'இன்னே வருகுவர் ' எனக் கூறிய சொற்களின் நலச் சிறப்பின் மிகுதியை உணர்த்த, மீமிசை' என்பது போல் "நன்னர்' என்ற சொல், நன்மொழி என்ற சொல்லைச் சிறப்பித்து நன்னர் நன்மொழி' என, அதன் முன் வருவதே இயல்பும் இனிமையுமாகவும், நச்சினர்க்கினியர் நன்னர்' என்ற இச்சொல்லை, அடுத்த வரியில் வரும் 'வாய்ப்புள்' என்ற சொல் வின் முன் கொண்டுபோய். நன்னர் வாய்ப்புள்' என நிறுத்தியிருப்பது இயல்புடையதாகத் தோன்றவில்லை.

பதினெட்டாவது வரியில் வரும் 'நல்ல' என்ற சொல் நல்ல ஆயின கேட்ட நற்சொல்’’ எனப்பொருள் தந்து, 'நல்ல வாய்ப்புள்' என வினை முடித்து நிற்பதே. இ ய ல் பு ைட த க வு ம், நச்சினார்க்கினியர், அதை இருபதாவது வரியில் வரும் "வருதல் தலைவர் வாய்வது' என்ற தொடரின் பின் கொண்டுபோய் நிறுத்தி, அவர் அங்ங்னம் வினை முடித்து வருதல் ந க்கு இல்லறம் நிகழ்ற்குக் காரணமாதலின் நல்ல காரியம்' எனப்பொருள் கூறியுள்ளார். அவ்வாறு கொண்டதால் நன்னர் வாய்ப்புள்' என்ற தொடர், வினை முடிவு பெறமாட்டாமல் 'நின்று வற்றுதல்' என்ற குற்றத்திற்கு உள்ளாகித் தனித்துவிடப்படுவதை, அவர், உணர்ந்திலர்.

இருபத்தொன்றாவது வரியில் வரும் 'பருவரல் எவ்வம்' என்பது, கார்ப்பரும் வந்துறவும் கணவன் வார்ாமை கண்டு அடைந்த மனத்தடுமாற்றமாகவும், நச்சினார்த் கினியர், அது கணவன் செலவுக் குறிப்பு அறிந்து கொண்ட வருத்த மிகுதியால் வினை மேற்சேரல்