பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் முடிபு-சிறு விளக்கம்

மூதூர் மருங்கில் போவதும், நெல்லொடு, முல்லை மலர் துாவுவதும், கைதொழுவதும், விரிச்சி நிற்பதும் ஆகிய தொழில்களை, நச்சினார்க்கினியர், வேந்தன், போர் மேற்கொண்டு செல்லும்போது, எடுத்த வினையின் விளைவு அறிவான் வேண்டி விரிச்சி நிற்பாரின் செயல்

களாகக் கொண்டு, அதற்காக, " அருங்கடி மூதுர் மருங்கிற் போகி' என்ற எட்டாவது வரிக்கண் வரும் போகி' என்பதன் முன்னர், 'நல்ல நல்லோர்

வாய்ப்புள்' என்ற பதினெட்டாவது வரியில் வரும் 'நல்வோர்’ என்பதனைக் கொண்டு வந்து நிறுத்தி, நல்லோர்' என்பதற்குப் படைத் தலைவர் ஏவலால் நற்சொல் கோடற்கு உரியவர்' எனப்பொருள் கூறியுள்ளார்.

மூதூர் மருங்கில் போவதும், நெல்லோடு முல்லை மலர் தூவுவதும், கைதொழுவதும், விரிச்சி நிற்பதும் ஆகிய அத்தொழில்கள் எல்லாம், தலைவியின் பிரிவாற்லாத்துன்பம் எப்போது தீரும் என்பதை அறிய விரும்பிய பெருழுது பெண்டிர் செயல்களே ஆதலின், நச்சினார்க்கினியர் கொண்டிருக்கும் சொல் முடிபும், சொற் பொருளும் பொருந்தா எனக் கொள்க.

பெரும் பெயல் பொழிந்த சிறுபுன்மாலை' என்ற ஆறாவது வரிக்கண் வரும் 'மாலை' என்ற சொல், பெருழுது பெண்டிர் விரிச்சி கேட்கச் சென்ற காலத்தை உணர்த்தி "மாலையில் போகி' எனப் போகிய என்ற வினை நிகழ்ந்த காலத்தை உணர்த்தும் வினையடை யாகவும், நச்சினாக்கினியர், அதை எண்பத்தைந்தாவது வரிக்கண் வரும் பாவை விளக்கு' என்பதன் முன்