பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:9 2 முல்லைப்பாட்டு

கேட்ட', அதன் கருத்தால்’’ என்பன போலும் மூலத்தில் இடம்பெறாத சில தொடர்களை, இடை இடையே இணைத்தும் சொல் முடிவு செய்திருப்பது இயல்பாக இல்லை.

இருபத்தெட்டாவது வரிக்கண் வரும் படு நீர்ப் புணரியிற் பரந்தா பாடி' என்ற தொடரால் குறிப்பிடப் படும் பாசறையும், எழுபத்தொன்பதாவது வரிக்கண் வரும் 'முரசு முழங்கு ப ா ச ைற ’’ என்ற தொடரால் குறிப்பிடப்படும் பாசறையும், வினை மேற் சென்ற வேந்தன் அமைத்துக் கொண்ட காட்டுப்பாசறை ஒன்றையே குறிப்பனவாகவும், நச்சினர்க்கினியர் அவ்விரு தொடர்களும் இருவேறு பாசறைகளைக் குறிப்பதாகக் கொண்டு இருபத்தெட்டாவது வரிக்கண் வரும் 'படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி' என்ற தொடரால் குறிக்கப்படும் பாசறையைப், பகையரசர் பாசறையாக மாற்றிவிட்டது மட்டுமல்லாமல், போரில் புண்பட்ட வேழம் குதிரை வீரர் ஆகியோர் நிலை குறித்துச் சிந்திக்கும், வினை மேற்சென்ற வேந்தன் செயல் களையும், பகையரசர் செயலாக மாற்றி, மருள் கொண்டுள்ளார். -

எழுபத்தேழு எழுபத்தெட்டு வரிகளாக வரும் " நோன்விரல் நகை தாழ் கண்ணி நல்வலம் திருத்தி' என்ற தொடர்க்கண் காணப்படும் விரலின் செயல், கண்ணியைத் திருத்தியதேயாகவும், நச்சினார்க்கினியர், அதன் செயல், பகைவரை வெட்டி, வெற்றிகோடலாகக் கொண்டு, அச்சொல்லை எண்பத் தொன்பதாவது வரிக் கண் வரும் வென்று' என்ற சொல்லின் முன்கொண்டுபோய் நிறுத்திவிட்டு மூலத்தில் இல்லாத :வெட்டி' என்ற சொல்லை, 'விரல்' வென்று' என்ற இரு சொற்களுக்கும் இடையே நுழைத்து இடர்ப்பட்டுள்ளனர்,