பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் முடிபு-சிறு விளக்கம் s's

இவ்வாறு ஒரே பாசறையை, இருவேறு பாசறை. களாகக் கொண்டு விட்ட காரணத்தால், பாசறை நிலை குறித்த சொல் முடிவு பரந்த பாடி (2 ) காவல் நின்ற (39) யானை (31) இளையர் கவளம் கைப்ப (36) பெரும் படை நாப்பண் (43) வேறு ஒர் அகம் நேர்பு (44) விளக்கம் மாட்ட (A9) மூதாளர் ஏமம் சூழ (54)மாக்கள் குறுநீர்க்கன்னல் இனைத்து என்று இசைப்ப (58) நல் இல்லில் (62) பள்ளியுள் (64) மிலேச்சர் உழையராக (66) கண்படை பெறாது (67) வேழம் உள்ளியும் (89) ஒழிந்தோர் உள்ளியும் ( 2) மாசிந்திந்தும் (74) நெடிது, நினைந்து (76) கண்ணி நல்வலம் திருத்தி (78) அரசிருந்து பளிக்கும் முரசு முழங்கு பாசறை (79) இன்துயில் வதியுநன் (80) ' என இயல்பாக முடியும், சொல் முடிபைக் கைவிட்டு, நச்சினார்க்கினியர் பரந்தபாடியில் {28) அரசிருந்து (29) வேழத்தை (89) உள்ளியும் (72) மாவைச்சிந்தித்தும் (74) ஒழிந்தோரை உள்ளியும் (72) நினைந்து 76) பாசறையில் (79) பெரும் படை நாப்பண் வேறோர் (48) அகம் நேர்பு (44) நல் இல் வில் (62) கன்னல் இனைத்து என்று இசைக்க (58) பள்ளியில் (64) இளையர் கவளம் கைப்ப (36) அரையர் மாட்ட (49) மூதாளர் ஏமம் சூழ (54) மிலேச்சர் உழையர் ஆக (66) நடுநாள் (50) கண்படை பெறாது (67) விரலால் (77) வென்று (89) கண்ணிவலம் திருத்தி (78) என முன்னுள்ள வரிகளைப் பின்னாகவும். பின்னுள்ள வரிகளை முன்னாகவும் வேண்டியவாறெல்லாம் சிதைத்துச் சொல் முடிவு செய்துள்ளார்.

என்பதாவது வரிக்கண் வரும் 'பாசறை இன்துயில் வதியுதன் காணாள்’ என்ற தொடரில் வரும் துயில் வதியுநன்’ என்ற தொடருக்கு, வினைமேற் சென்று. வினை முடித்து அக்களிப்பு மிகுதியால் பாசறைக்கண் தனித்துத் துயில் கொள்வோன் என்றும், காணாள்' என்ற சொல்னுக்கு, வினை முடித்த பின்னரும் குறித்துச் சென்ற கார்ப்பருவ வரவு கண்டும் வரக் காணாதவன்