பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் முடிபு-சிறு விளக்கம் 3 #5

வகுத்த நச்சினார்க்கினியர், செய்யுட்களில் சொற்களைக் கிடந்தவாறே கொண்டு பொருள் கூறியிருப்பாராயின், அவர் உரை, பிற உரை ஆசிரியர்களின் கண்டனத்திற்கு உள்ளாகாத நவிசிறப்புடையதாக நன்கு மதிக்கப் பட்டிருக்கும். ஆனால் செய்யுட்களில் சொற்களைக் கிடந்தவாறு பொருள் கொள்ளாது. சொற்களைத் தாம் விரும்பியவாறெல்லாம் எங்கெங்கோ கொண்டு சென்று அதற்கேற்ப பொருள் கொள்வதில் பேரார்வம் காட்டும் இயல்புடையவர் நச்சினார்க்கினியர்.

தாம் உரை எழுத மேற்கொண்ட நூல்களில் அவர் இயல்பாகக் கையாளும் முறை இது என்றாலும், முல்லைப் பாட்டு உரையில் அவர் இம் முறையினைக் கையாண்ட தற்குக் காரணம், முல்லைப்பாட்டிற்குரிய துறைப் பொருளை, அவர் பிழையாகக் கொண்டதே ஆகும்:

கார்ப்பருவத் தொடக்கத்தே வந்து சேர்வேன் என உறுதி கூறிப் பிரிந்து சென்ற தலைவன், கார்ப்பருவம் வந்து எய்திய பின்னரும் வாராமை கண்டு, அதுகாறும் அவன் சொல்வழி ஆற்றியிருந்த தலைவி, ஆற்றாமைக்கு வருந்து நிலைகண்டு, பெரு முது பெண்டிர் விரிச்சி கேட்டு வந்து, காரணம் பலகாட்டி தலைவர் வருதல் உறுதி' எனக் கூறவும், ஆற்றாமைத் துயர் தணியாதாகக் கன்னர் உகுத்து நின்ற அந்நிலையில், ஆற்றியிருத்தலே அறிவுடைமை என உள்ளுணர்வு உணர்த்த, தன் துயரைப் பிறர் காணாவாறு மறைத்துக் கொண்டு, அருவி இன்னிசை மயக்கத்தில் தன்னை மறந்து கிடந்தவள் காதுகளில், புகுந்து ஒலிக் குமாறு, தலைவன் தேசில் பூண்ட குதிரைகள். அவள் மனை முன்றிற்கண் வந்து நின்று, குரல் எழுப்பியதை, அவள் தோழியர் கூறி அகமகிழ்ந்தது என்பதே, இம் முல்லைப்பாட்டில் துறை யாகும், - .