பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 6 முல்லைப்பாட்டு

ஆனால் நச்சினார்க்கினியர், முறையான இத் துறைப் பொருளை ஏற்றுக் கொள்ளாது, தலைவன் வினை வயிற் பிரியக் கருதியதனைக், குறிப்பால் உணர்ந்து ஆற்றாளாய தலைவியது நிலை கண்டு, அவன் வற்புறுப்ப வும் உடம்படாளாக, அவன் அவள் அறியாவாறே பிரிந்து சென்று விட்டாணாக, தன்னிடத்தே வதிகின்றவன் இன்துயிலைக் காணாளாய், அவள் துயர் உழந்த வழி, பிரிதல் ஆடவர் கடன், என்பன போலும் காரணம் பல காட்டவும், கருத்தில் கொள்ளாளாக, பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டுவந்து, தலைவர் வருதல் உறுதி, துயர் களைக என, அது கேட்டு அருவி இன்னிசை கேட்டுக் கிடந்தோள் காது நிறைய, குதிரைகள் குரல் எழுப்பியதை அவள் தோழியர் கூறி மகிழ்ந்தது. என்பதாக வேறு துறை கொடுத்துள்ளார். .

அவ்வாறு துறை கொண்டதற்கு அவர் கூறும் காரணம் இது : இங்கனம் பொருள் கூறாமல் தலைவியது இரக்க மிகுதி கண்டு பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டுவந்து 'தலைவர் வருதல் வாய்வது ; நின் எவ்வம் களை' என்று பல்காலும் ஆற்றிவிக்கவும், ஆற்றாளாய்த் துயர் உழந்து, புலம்பொடு தேற்றியும் ஒருத்தியும், மையல் கொண்டும். உயிர்த்தும் நடுங்கி நெகிழ்ந்து கிடந்தோள் எனப் பொருள் கூறியக் கால், நெய்தற்குரிய இாங்கல் பொருட்டன்றி, முல்லைக்குரிய இருத்தற் பொருட்டு ஆகாமை உணர்க. அன்றியும், தலைவன் காலம் குறித்தல்லது பிரியான் என்பதாலும், அவன் குறித்த காலம் கண்டால் தலை விக்கு வருத்தம் மிகும் என்பதாலும், அது பாலையாம் என்பதாலும், அல்வாற்றாமைக்கு இரங்கல் நிகழ்ந்தால் நெய்தலாம் என்பது உம் நூல் கருத்தாதல் உணர்க. -

நச்சினார்க்கினியர் கூறும் துறையினையே இப் பாட்டின் துறையாகக் கொண்டக்கால் எழும் முரண் பாடுகளை முதற்கண் விளக்கிவிட்டு, ஏனையோர்