பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் முடிபு-சிறு விளக்கம் 9 7

கூறும் துறை குறித்தும் அவர் எழுப்பும் தடை குறித்தும் பின்னர் ஆராய்வோம்.

தலைவனைக் காணாளாய்த் தலைவி துயர் உற்றவழி, ' பிரிதல் ஆடவர் கடன்' என்பன போலும் காரணம் பல காட்டவும் கருத்தில் கொள்ளாத போது, பெருமுது பெண் டிர் விரிச்சி கேட்டு வந்து தலைவர் வருதல் உறுதி நீ நின் வருத்தம் நீங்குக' என, அது கேட்டு அவள் நீடு நினைந்து ஆற்றியிருந்த வழி என்பதே இப்பாட்டின் துறைப் பொருளாம் எனக் கொண்டால், பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டது தலைவன் பிரிவின் போது ஆதல் வேண்டும். ஆனால், அவர்கள் விரிச்சி கேட்டது மழை பொழிந்த மாலைப் போதில் என்கிறது செய்யுள். அவ்வாறாயின், அது கார் காலத்து மாலைப்

போதாதல் வேண்டும். அங்ங்னம் கொண்டால் தலைவன் பிரிந்து சென்றது கார்காலம் என்றாகிவிடும். தலைவன் திரும்பி வருவதாகக் கூறிச் செல்லும் காலத்தான்் கார்கால்மே யல்லாது, அவன் பிரிந்து

செல்லும் காலம், கார்கால ம் ஆகாது. ஆகவே, பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டது, தலைவன் பிரிவின் போது அன்று; மீளும் போதே ஆகும். ஆகவே, அவர்கள் விரிச்சி கேட்டது பிரியும்போது எனக் கொண்டு, அதற்கேற்ப கூறும் துறை, முல்லைப் பாட்டின் துறையாகாது. - . . . . . .

மேலும், வர இருப்பது நல்லதா கெட்டதா என்பதை அறிந்துகொள்ள மாட்டாது கவலை மிகும் நேரத்தில்தான்் விரிச்சி கேட்டு நிற்பர். கார்காலத் த்ொடக்கத்தே வருவதாகக், காலம் குறித்துச்சென்றவன், அக்காலம் வந்துறவும், வாராமை கண்டு, காரணம் அறிய மாட்டாது கலக்கம் மிக்க வழி, விரிச்சி கேட்க வேண்டிவருமேயல்லாது, அவன் பிரியக் கருதிய வழி, விரிச்சி கேட்க வேண்டியிராது. ஆகவே பெண்டிர் விரிச்சி கேட்டு நின்றது, கணவன் பிரிவிற்கு ட்டன்

மு.-7