பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 8 முல்லைப்பாட்டு

ப்டாதவளை உடன்படுத்த உறுதி மொழி அளிக்க, பிரிவின் தொடக்கத்தில் எனக்கொண்டு அதற்கேற்ப அமைத்துக் கொண்ட துறை, உண்மை துறை ஆகாது.

'ஓதல், உறுபொருள் தேடல், உற்றுழி உதவல் போலும் முயற்சி குறித்துத் தலைவன் பிரிவு மேற்கொள்ள, பிரிவுத் துயர் ஆற்ற மாட்டாது தலைவி அவன் பிரிவிற்கு உடன்படாதபோது, தலைவனும் தோழியும் பிரிவால் உளவாகும் பெருமை, பிரியா வழி உளவாம் சிறுமைகளை விளங்கக் கூறிப், பிரிய வேண்டிய இன்றியமையாமையினை வற்புறுத்தி அவளை உடன் படுத்திய பின்னரே பிரிவு நிகழும்.

பிரிவின்கண் தலைவன் கூற்று நிகழும் இடம் குறித்துக் கூறும் தொல்காப்பியம்

நாளது சின்மையும், இளமையது அருமையும், தாளாண் பக்கமும், தகுதியது அமைதியும், இன்மை யது இளிவும், உடைமையது உயர்ச்சியும் அன்பினது அகலமும், அகற்சியது அருமையும், ஒன்றாப் பொருள்வயின் ஊக்கியது பாலினும் வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு - ஊதியம் கருதிய ஒரு திறத்தான்ும், புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும்'

-தொ, பொ. 11. எனப், பிரிவின் இன்றியமையாமை குறித்துத் தலைவன் விளக்கும் பல்வேறு பொருட் காரணங்களைப் பட்டியல் போட்டுக் காட்டுவது உணர்க. -

- இவ்வாறு தலைவியைப் பல்லாற்றானும் தேற்றி, அவள் உடன்பாடு பெற்றுப் பிரிவதே பண்பும் மரபும் ஆம். ஆகவும் தலைவன் தலைவியறியாவாறே பிரிந்து விட்டானாகவும், அவள் தன்னோடு இருந்தவ