பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் முடிபு-சிறு விளக்கம் •.9 3

னுடைய இன்துயிலைக் காணாது கலங்கினாளாகவும் நச்சினார்க்கினியர் கூறுவது அகத் திணை மரபொடு முரணிய குற்றம் உடையதாம். --

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீட்ாக 1954 ல் வெளியிடப்பட்ட, சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை என்ற வரிசையில் ஒன்பதாவது வரிசையான * வணிகரிற்புலவர்' என்ற நூலில், முல்லைப்பாட்டு ஆசிரியர், காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார். மகனான தப்பூதனார் பற்றிய வரலாற்றுக் குறிப்பில், முல்லைப் பாட்டின் துறையாக, நச்சினார்க்சினியர் கூறிய துறையையே நானும் கூறியுள்ளேன் என்பது சங்க இலக்கியங்களுக்கு நச்சினார்க்கினியர் கொள்ளும் உண்மை. பொருளே உச்சிமேல் கொள்ளும் பொருளாம் என்ற உணர்வுடைய பருவத்தே கூறியது அது. ஆகவே, அது ஏற்புடையதாகாது.

பிரிவுத் துயர்க்காம் காரணம் நிலந்தோறும் வேறுபடும் என்றாலும், தலைவன் பிரியத் தனித் திருக்கும் நிலையில் அப்பிரிவுத் துயர் பொறாது வருந்துவது ஐந்நிலைத் தலைவிகளுக்குமே உரிய ஒன்று. -

குறிஞ்சியில், தலைவன் வரும் மலைக்காட்டு வழியின் கொடுமை, அவ்விழியில் இரவிடை வரும் தலைவனுக்கு நேரலாம் கேடுகளை நினைந்து வருந்துவாள். . . . .

பாலையில், தலைவன் செல்லும் வழியில் கோடையின் கொடுமை நினைந்தும், ஆங்குக் காணலாம் விலங்குகளின் காதல் காட்சிகள் காரணமாகத் தன்னை நினைந்து, வினை மேற்கொள்வது விடுத்து, மீண்டு விடுவனோ என அஞ்சியும் வருந்துவாள். -

மருதத்தில், தலைவன் சென்றிருக்கும் இடம் பரத்தையர் இல்லமாதல் அறிந்து வருந்துவாள்.