பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I do முல்லைப்பாட்டு

நெய்தலில், குறித்துச் சென்ற காலம் வரவும் தலைவன் வாராமை கண்டு வருத்தம் மிக்கு, நிலவோடும், அன்றில் முதலாம் உயிர்களோடும் வாய்விட்டுப், பிறர் அறியப் புலம்புவாள்.

முல்லையில், குறித்துச் சென்ற காலம் வரவும், தலைவன் வாராமை கண்டு வருந் துவாள். அவ்வருத்தம் பிறர்க்குப் புலனாகா வண்ணம், தன் மனத்திற் குள்ளாகவே மருகி மாழ்குவாள்.

பிரிவாற்றாத தலைவி வருந்தும் பொருள் பொதிந்த முல்லைத் திணை குறித்த செய்யுட்கள், சங்க இலக்கியங் களில் எண்ணில உள. எடுத்துக் காட்டுக்கு ஒரு சில.

'காடுகவின் எதிரக் கனைபெயல் பொழிதலின்

பொறிவரி இனவண்டு ஆர்ப்பப் பலவுடன் - நறுவி முல்லையொடு தோன்றி தோன்ற வெறியேன்றன்றே வீகமழ் கானம் : எவன்கொல் மற்றவர் நிலை என மயங்கி இகுபனி உறைக்கும் கண்ணொடு இளைபாங்கு இன்னாது உறைவி' - அகம் : 1.64. அரசு பகை தனிய முரசுபடச் சினை.இ ஆர்குரல் எழிலி கார் தொடங்கின்றே , அளியவோ அளியதாமே, ஒளி பசந்து மின்னிழை நெகிழச் சாஅய்த் х தொன்னலம் இழந்த என் த ட மென்தோளே”

- ஐங்குறுநூறு : 455. ஏதில பெய் மழை காரென மயங்கிய பேதை யங்கொன்றைக் கோதைநிலை நோக்கி எவன் இனி மடந்தை நின் கவிழ்வே?”

ஐங்குறுநூறு : 462.