பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் முடிபு-சிறு விளக்கம் 1 & 1

'புனை இழை நெகிழச் சா அய் நொந்துநொந்து

இணையல் வாழியோ இகுளை !'

-ஐங்குறுநூறு : 467; காட்டுவளம் காணச் சென்ற இடத்தில் கண்ணகி, தாம்காணக் கணவனோடு வானாடு புகுந்த காட்சியைக், குன்றக் குறுவர் கூறிய காலை, உடனிருந்த சாத்தன். கண்ணகி வரலாற்றை விளங்கக் கூறக் கேட்ட செங்குட்டுவன், 'தன்னுயிர் கொண்டு கணவன் உயிர் தேடுவாள்போல் உயிர் விட்ட பாண்டிமாதேவி, கணவன் கள்வனல்லன் என்பதை நிலைநாட்டி, ஆராயாது கொன்ற பாண்டியன் உயிர் இழந்துபோகவும், அவன் மாநகர் எரியுண்டு போகவும் செய்து, கணவனோடு வானாடடைந்த கண்ணகி ஆகிய இருவரில், பாராட்டிற் குரியவர் யாவர்?' என்று கேட்க, பாண்டிமாதேவி வானாடு அடைந்து விட்டாள் ; நம்நாடு வந்தடைந்த கண்ணகி நல்லாளுக்குக் கோயில் எழுப்பி, வழிபாடு ஆற்ற வேண்டும் என்று கூறி, சிலை அமைக்கக் கல் கொணர்வான் வேண்டி கணவனை வடநாடு போக, விரும்பி வழிவிடுத்த சேரன்மாதேவி, சென்ற கணவன் வருகை நீட்டித்த வழிப் பிரிவுத் துயர் மிக்கு உறக்கமும் இழந்து வருந்துவாள், பிரிவுத் துயர் எத்துணை தான்் கொடியதாயினும், அதைப் பிறர் காண விடுதல், இல்லற மகளிர்க்கு இயல்பாகாது என்ற உணர்வு வரப்பெற்றதும், செங்குட்டுவன் தலைநகர் வந்தடைந்த செய்தியைச் செவிலியரும், கூனும் , குறளும் போலும் குற்றேவலரும் வந்து தெரிவிக்கும்வரை, தன் துயர் மறந்திருக்க, குறிஞ்சிப்பண், உழவர் பாட்டு, குழலிசை, குரல் இசை போலும் பல்வேறு இசையில் மயங்கிக் கிடந்த நிகழ்ச்சியை இளங்கோவடிகளாரும் பாடியுள்ளார்,

உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும்

செயிருடன் வந்த இச் சேயிழை தன்னிலும்