பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் முடிபு-சிறு விளக்கம் } {}.3

பிரிவால் வருந்தும் தலைவியர் இயல்பு இதுவாகவும், பெருமுது பெண்டிர் ஆற்றுவிக்கவும் ஆற்றாளாய்த் துயர் உழந்தாள் என்றால், அது நெய்தற் குரிய இரங்கல் ஆகுமே அல்லது, முல்லைக்கு உரிய இருத்தல் ஆகாது எனப் பிறழிக் கொண்டு, அதற்கு ஏற்பப் பொருள் கொள்வான் வேண்டி, சொற்களைக் கிடந்தாங்குக் கொள்ளாது வேண்டியவாறெல்லாம் கொண்டு சென்று கூட்டிப் பொருள் முடிக்கும் நச்சினார்க்கினியர் போக்கு ஏற்புடையதொன்ற ன்று.

நெடுநல் வாடைக்கு உரிய திணை பாலைக்குப் புறனான வாகை எனத் தம்முடைய துவக்க உரையில் கூறும் நச்சினார்க்கினியர், பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென என்ற வரிக்கண்(2)வரும் புதுப்பெயல்’ என்பதற்குக் 'கார்காலத்து மழை’’ என்றே பொருள் கூறியுள்ளார். கார் காலம் முல்லைக்கு உரியது. காரும் மாலையும் முல்லை' என்பது தொல்காப்பியம், -

மேலும் அதே நெடுநல்வாடையில் தன் கணவனாம் பாண்டிய மன்னர் போர் மேற்கொண்டு பிரிந்து செல்லுங்கால், வினை முடித்து வருவதாகக் குறித்துச் சென்ற காலம் வந்துறவும் வந்திலனாக, அரச மாதே வி வருந்திக் கிடந்தாள். நரைதிறை யுற்ற பெருமுது பெண்டிராம் செவிலித்தாயர் எளிய அரிய சான்றுகளை அடுக்கடுக்காகக் கூறித் தேற்ற முனைந்தனர். அவர்கள் தேற்றவும் அவள் தெளிவு பெற்றுத் துயர் தணிந்தா ளல்லள். அவ்வாறு வருந்திக் கிடந்தவள். இறுதியில் துயர் உறுவது தகாது எனத் தான்ே உணர்ந்தாள். உணர்ந்தவள், பிரிவுத் துயர் மறந்து இருத்தற் பொருட்டுத் தன் சிந்தனையைக், கட்டிலின் விதான்த்தில் கட்டப்பட்டிருந்த திரைச்சீலையில் தீட்டப்பட்டிருந்த, உரோகிணியைப் பிரியாத் திங்களின், ஓவியக் காட்சியில்