பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 முல்லைப்பாட்டு .

செலுத்தியிருந்தாள். இந்தக் காட்சியைப் புலவர் பார்த்துப் பாராட்டிப் பாடியுள்ளார்.

"நரை விராவுற்ற நறுமென் கூந்தல்

செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழிஇக் குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி இன்னே வருகுவர் இன்துணையோர் என - உகத்தவை மொழியவும் ஒல்லாள் ; மிகக் கலுழ்ந்து

@ ↔ ?。於 > @ 彎@ **** * S AAAA S SSSS Z Y S AAAA S S AAAA S z S C Y z Y S AAA S MS

புதுவது இயன்ற மெழுகுசெய் படமிசைத் - திண்ணில மருப்பின் ஆடுதலையாக விண்ணுார்பு திரிதரும் விங்குசெலல் மண்டிலத்து. முரண்மிகு சிறப்பின் செல்வனோடு நில இய உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா

புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவை'

-நெடுநல்வாடை : 152-166.

ஆகவே, தலைவியது வருத்தம் கண்டு, முதுபெண்டிர், விரிச்சி கேட்டு வந்து, 'தலைவர் வருவராதல் வாய்வது நின் எவ்வம்களை' என்று பல்காலும் ஆற்றுவிக்கவும் ஆற்றாளாய்த் துயருழந்து கிடந்தாள் எனப் பொருள் கூறுதல் நெய்தற்குரிய இரங்கற் பொருட்டன்றி முல்லைக்குரிய இருத்தற் பொருட்டாகாது’ எனக் கூறி, அத்ற்காக, விரிச்சி கேட்டவர் படைவீரர் எனவும், காரணம் பல காட்டித் தேறியவன் தலைவன் எனவும், தேற்றிய காலம் பிரிந்து போவதற்கு முன் எனவும் மாற்றி நச்சினார்க்கினியர் பொருள் கூறியிருப்பது முறையாகாது என்பது நெடுநல்வாடைப்பாட்டில் காணலாம், இப்பகுதியாலும் உறுதியாதல் அறிக.