பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் முடி பு-சிறு விளக்கம் - 1 05

"சொல் முடிபு-சிறுவிளக்கம்' என்ற தலைப்பின் கீழ், முல்லைப் பாட்டிற்கு உரை எழுதிய, உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்குஇனியர் அவர்கள். பாட்டைத் தமக்கு வேண்டியவாறெல்லாம், முன்னுள்ள சில சொற்களைச் சில தொடர்களைப் பல வரிகளுக்குப் பின் கொண்டு சென்று கூட்டியும், அதே போல், பின் உள்ள சொற்களை, வரிகளைப் பலவரிகளுக்கு முன் கொணர்ந்து வைத்தும் பொருள் கூறியிருப்பதின் பொருந் தாமையினை விளக்கியுள்ளேன். நச்சினார்க்கினியர் உரை வகுத்திருக்கும் முறை பற்றி, நான் கூறியிருக்கும் கருத்தையே, பல்லாவரம் பொதுநிலைக்கழக ஆசிரியர் மறைத்திரு. சுவாமி வேதாசலம் என்னும் மறைமலை அடிகளார். 1903 ல் ஆராய்ந்து வெளியிட்ட 'முல்லைப் பாட்டு ஆராய்ச்சி' என்ற தம் நூலிலும், முல்லைப் பாட்டின்மேல் நச்சினார்க்குரை' என்ற தலைப்புள்ள பகுதியில் கூறியுள்ளார். ஆகவே அதை, எடுத்துக் காட்டாகத் தருவது முறை என்பதால், அவர் கருத்தை அப்படியே கொடுத்துள்ளேன்! அது, இதோ:

முல்லைப் பாட்டின்மேல் நச்சினார்க்கினியருரை

இனி, இதுவே 'மாட்டு’ என்னுஞ் செய்யுளுறுப்பின் பயனாமென்பது நுண்ணறிவுடையார்க் கெல்லாம் இனிது விளங்கிக் கிடப்பவும், இதன் கருத்துப் பொருள் இது வாதல் அறியமாட்டாத நச்சினார்க்கினியர், செய்யுளில் இடையற்று ஒழுகும் பொருள் ஒழுக்கம் அறிந்து உரை எழுதாராய், ஓர் அடியில் ஒரு சொல்லையுந் தொலைவிற் கிடக்கும் வேறோர் அடியில் வேறொரு சொல்லையுந் தமக்குத் தோன்றிய வாறெல்லாம் எடுத்து இணைத்துத் தாமோர் உரை உரைக்கின்றார். நச்சினார்க்கினியர்க்கு முன்னேயிருந்த நக்கீரர், இளம் பூரணர், பேராசிரியர், சேனாவரையர், பரிமேலழகியார், அடியார்க்கு நல்லார் முதலான உரையாசிரியன் மாராதல், பின்னேயிருந்த சிவஞான யோகிகள் முதலியோராதல் இவ்வாறு