பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

豆份台 முல்லைப்பாட்டு

செய்யுட்களைக் கண்டவாரெல்லாம் அலைத்து உரை எழுதக் கண்டிலம். மேலும் நச்சினார்க்கினியர் இங்ங்னஞ் செய்யுட்களை அலைத்து நலிந்து பொருள் சொல்லு முறையை ஆசிரியர் சிவஞானயோகிகள் தாம் இயற்றிய தொல்காப்பியச் சூத்திரவிருத்தியில் ஆங்காங்கு மறுத்தருளியவாறுங் காண்க. அகன்று கிடக்குஞ் செய்யுட் பொருளை அணுக வைத் துப் பொருத்திச் சொல்வதே தொல்காப்பியனார் கூறிய மாட்டு என்னும் உறுப்பாவதன்றிச் செய்யுள் ஒருபக்கமும் உரை ஒரு பக்கமுமாக வைத்து உரைப்பது அஃது அன்றாம் என்பது க ைடப் பி டிக் க. அன்றன்று, நச்சினார்க்கினியர் உரைக்கும் வரைப்பொருள் சிறந்ததாகலின், அவர் அவ்வாறு செய்யுட்களை அலைத்துப் பொருள் கூறுதல் குற்றமாகாதெனின் நன்று சொன்னாய், அவர் எவ்வளவுதான்் சிறந்த உரை உரைப்பினும் அது செய்யுட் பொருளைக் கெளவிக் கொண்டு செல்லாமல் வேறுபடு மாயின் அது கொள்ளற்பாலதன்று என மறுக்க, செய்யுளுக்கு இசைய உரை எழுதுதல் வேண்டுமேயன்றி உரைக்கு ஏற்பச் செய்யுளை அலைத்து மாற்றல் வேண்டுமென்றல் 'முடிக் குத் தக்க தலை செய்து கொள்வேம்' என்பார் சொற்போல் நகையாடுதற்கே ஏது வாமென்றொழிக. அற்றன்று, செய்யுளியற்றிய புலவரே ஓர் ஒழுங்கு மின்றி அவ்வாறு சொற்களையும் பொருள்களையுஞ் சிதற வைத்துப் பாடினாராகவின் அக்கருத்தறிந்து நச்சினார்க்கினியர் அங்ங்ணம் பொருள் உரைத்துக் கொண்டார் என்னாமோவெனின் ; அறியாது கடாயினாய், உலகவியற்கையும் மக்களியற்கையும் அறிந்து வரிசை வரிசையாக அரும்பொருள் விளங்கித் தோன்றப் பாடும் நல்விசைப் புலவர் அவ்வாறு ஒரொழுங்கு மின்றிப் பாடினாரென்றல் உவகில் எங்குங் காணப்படாமையானும், அது நல்லிசைப் புலமை ஆகாமையானும் அங்ஙனம் சொல்லுதல் பெரியதோர் இழுக்காய் முடியும் என்றுணர்க;