பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. முல்லைப்பாட்டு

அலரி தாஉய்க் கைதொழுது, பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப (7-11) என்ற வரிகளில் அவர்கள் வணங்கும் தெய்வமும், வழிபாட்டு முறையும், 'நெல்லொடுநாழி கொண்ட (8.9) வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகு' (98) என்ற வரிகளில் அவர்தம் உணவும், நறுவி முல்லை (9) சேண் நாறுபிடவம்' (2.5) செறிஇலைக் காயா (93) முறி இணர்க்கொன்றை (94) 'கோடல் குவிமுகை' (9.5) 'தோடார் தோன்றி (96) என்ற வரிகளில் அந்நிலத்து மலர்களும், 'கான்யாறு தழி இய அகன் நெடும் புறவு’ (24) என்ற வரியில் அந்நிலத்து நீரும் கூறப்பட்டு, முல்லைத்திணைக்கு உரியவாகிய கருப்பொருள்கள் அனைத்தும் குறைவற இடம்பெற்று இருப்பது காண்க.

மணங்கொண்டு இல்லற வாழ்க்கையை இனிதே நடத்திக் கொண்டிருக்கிற நாட்களில், வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆற்றவேண்டிய கடமைகளை முன்னிட்டு, இல்லறத்தலைவன், இல்லறத் தலைவியை விடுத்துப் பிரிந்துசெல்ல, அவன் மீண்டு வருவதாகக் குறித்துச் சென்ற கார்காலம் வரும்வரை, இல்லறத்தலைவி, தனிமைத் துயர்தாங்கி ஆற்றியிருத்தல் முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள் ஆகும்.

நெஞ்சாற்றுப் படுத்த நிறை தபு புலம்பொடு, நீடு நினைந்து தேற்றியும் ஓடுவளை திருத்தியும், மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும், ஏவுறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து, பாவை விளக்கிற் பரூஉச்சுடர் அழல. இடம் சிறந்து உயரிய எழுநிலை மாடத்து, முடங்கிறைச் சொரிதரும் மாத்திரள் அருவி, இன் பல் இமிழிசை ஒர்ப்பனன் கிடந்தோள் :-(81-88) என்ற வரிகளில் தெளிவாக இடம் பெற்றிருப்பது காண்க.

இம்முல்லைப்பாட்டைக் கார்ப்பருவத்து மாலை வரவுகண்டு வருந்திகிடக்கும் தலைவியது நிலைவிளக்கும்,