பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு விளக்கம் 5

'நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு’ என்பது முதல் 'பூப்போல் உண்கண் புலம்பு முத்துறைப்ப' என முடியும் வரையுள்ள இருபத்தி மூன்றாவது வரியோடு நிறுத்திக்கொண்டு, அவ்வாறு வருந்திக்கிடப்பவள் மகிழ, தலைவன் மீண்டுவந்து சேர்ந்ததை விளக்கும், 'நெஞ் சாற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு' எனத் தொடங்கும் 81-வது வரிமுதலாக வினை விளங்கு நெடுந்தேர் பூண் டமாவே' என்ற இறுதிவரி வரையான 23 வரிகளை அடுத்து, இணைத்து 46 வரிகளைக் கொண்ட சிறிய பாட்டாகக் கொண்டிருக்கலாம்.

'கான்யாறு த மீஇய அகன் நெடும்புறவு முதலாக இன்துயில் வதியுநள் காணாள் துயர் உழந்து' வரையுள்ள 57 வரிகள் இல்லாமலே, முல்லைத் திணைக் குரிய முதல், கரு, உரி பொருள்களைக் குறைவறக் கொண்ட முல்லைத் திணைப்பாட்டாக அது அமைந் திருக்கும். ஆனால், அவ்வாறு கொண்டிருந்தால், முல்லைத் திணையை முழுமையாகக் கொண்டதாகாது; முல்லைத் திணை குறித்த அகப்பொருள் கூறியதோடு, அம் முல்லைக்குப் புறனான புறப்பொருளையும் கூறினால் தான்் முல்லைத் திணை நிறைவு பெறும் என்பதை உணர்ந்தவர் புலவர்; ஆகவே அது கூறும் அப்பகுதிகளை, இடையில் அமைத்துள்ளார்.

முல்லை என்ற அகத்திணையின் புறத்திணை, வஞ்சித்திணை என்றும், அது மண் ஆசை கொண்டு படைதொடுத்து வருவானை வென்று பணியவைப்பது என்றும் கூறுவர்.

'வஞ்சி தான்ே முல்லையது புறனே'

எஞ்சா மண்தசை வேந்தனை, வேந்தன் அஞ்சுதகத் தலைச் சென்று அடல் குறித் தன்றே'