பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●6 முல்லைப்பாட்டு

வேட்டுவப் படைவீரர்களின் இருக்கையாம், சிறு வாயில்களை உடைய சிற்றரண்களை மாட்டி - அழித்து: காட்ட இடுமுள் புரிசை-காட்டில் உள்ள முள்ளை இட்டு ஆக்கிய மதிலை ; ஏமுற வளைஇ - காவல் மிகும்படி வளைத்து அமைத்த படு நீர்ப் புணரியின் மழைபடு நீரால் நிறைந்த கடல்போல, பரந்தபாடி - பரந்து அகன்ற பாசறையில், உவலைக் கூரை ஒழுகிய தெருவில்தழையால் வே யப்பட்ட கூரைகளை உடைய குடில் களால் ஒழுங்குபட்ட தெருவில் : கவலை முற்றம் - நாற்சந்திகளில். காவல் நின்ற - காவலாக நின்ற : தேம் படுகவுள - மதம் நீர் வடியும் கதுப்பினையும் : சிறுகண் யானை - சிறிய கண்களையும் உடைய யானை ஒங்குநிலைக் கரும் பொடு - ஓங்கி வளர்ந்த நிலையினை உடைய கரும்புகளோடு ; கதிர் மிடைந்து யாத்த - நெற்கதிர்களோடு நெருங்கிப் பொதிந்து கட்டிய ;

வயல் விளை - வயலிலே விளைந்த காவியையும் : இன்குளகு-இனிய அதிமதுரத் தழையையும் ; உண்ணாதுஉண்ணாமல் : துதல் துடைத்து - அவற்றால் தன்

நெற்றியைத் துடைத்துவிட்டு ; அயில் நுனை மருப்பில் - கூரிய மூளையையுடைய தந்தத்தின்மேல் , தம் கை இடைக் கொண்டென - தம் தம் துதிக்கையை மடித்துப் போட்டுக்கொண்டு நிற்க க ைவமுள் கருவியின் - கவைத்த முள்ளையுடைய குத்துக் கோலால் குத்தியும் : வடமொழி பயிற்றி - வடமொழியிலான ஏவற் சொற் களைப் பலமுறை கூறியும் : கல்லா இளைஞர் - யானைகளைப் பழக்குதல் அல்லது வேறு தொழில் கற்று அறியாத யானைப் பாகர் : கவளம் கைப்ப-கவளத்தைத் தின்னும் படி செய்ய கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்-ஆடையைக் காவிக்கல் கலவையில் தோய்த்து உடுத்த தவ வேடத்தை உடைய பார்ப்பான் ; முக்கோல் அசைநிலை கடுப்ப - தன் கை முக்கோலை நட்டு அதில் அக்காவியாடையை சரம்புலர இட்டு வைத்தது போல்; நற்போர் அறவழி ஆற்றும் போரில், ஓடா வல்வில் .