பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசறை அமைப்பு 4”

தோற்றுப் பின் இடாமைக்குக் காரணமான வலிய வில்லை நாட்டி : துாணி நாற்றி அதில் அம்பறாத் துணிகளை மாட்டி ; கூடம் குத்தி கால்களைக் கூடமாக நட்டு ; கயிறு வாங்கு இருக்கை - கயிற்றினை வலித்துக்கட்டிய கூடாரங்களில் பூந்தலைக் குந்தம் - அழகிய பூவேலைப்பாடு அமைந்த வேற்படைகளை : குத்தி - நட்டு : கிடுகு நிரைத்து . அவற்றின் இடையே, கேடயங்களையும் வரிசையாகப் பிணித்து : வாங்கு வில் அரணம் அரணமாக - வளைந்த விற்படையாகிய அரனே, அரணாக அமைந்த) -

பாசறைக்கண் பாடிக்கொண்டிருக்கும் நாற்படை, வறுமையின் நீங்கிய வளமார் வாழ்வுடையது என்பதை அறிவுறுத்த எண்ணிய புலவர், ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்ற உத்தியின் அடிப்படையில், தம் முன்னே போர்எனப் போடப்பட்டிருப்பன, களிறுகள் பொதுவாகப் பெரிதும் விரும்பும் கரும்பும், .ெ சந் .ெ ந ற் க தி ரு ம், அதிமதுரத்தழையுமாகவும், அவற்றையும் வேண்டாது வெறுத்து ஒதுக்கும் களிறுகளைக் காட்டுமுகத்தான்், அப்படையின் செல்வச் சிறப்பை விளக்கியுள்ளதாகக் கொள்வர் ஒருசிலர்.

வீரர்களை வறுமையில் வாடவிடுவது வெற்றிக்கு வழிவகுப்பதாகாது. செல்லும் இடம் எங்கும் வெல்லும் போரே காண விரும்பும் வேந்தர், தம் படைவீரர்களை வறுமையிலா வாழ்வில் நிலைநிறுத்துவதைக் கருத்தாக இருந்து முடிக்க வேண்டும் என்பதும், "சிறுமையும், செல்லாத் துணியும், வறுமையும் இல்லாயின் வெல்லும் படை' என்ற வள்ளுவர் வாக்கு அதைத் தெளிவுபடுத்து கிறது என்பதும் உண்மை. .

அது போலவே, சோழன் நலங்கிள்ளியின் அரசவைக்கண் இருந்து அரிய பல அறிவுரைகளை, அரசியல் நெறிமுறைகளைக் கூறிவந்த புலவர், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், நலங்கிள்ளி, நின்