பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48°. - முல்லைப்பாட்டு

வெற்றிக்குத் துணைநிற்கும் நின் நாற்படையின் நல்வாழ்வில் என்றும் நாட்டம் உடையையாத ல் வேண்டும். நெல்வயல்களில் வந்து படியும் பறவைகளை ஒட்டிக் காவல் புரிந்திருப்பார், பசிவந்துற்றதும், உணவு தேடியலை யாதே, வயலுக்கு அணித்தாக ஒடும் வாய்க்கால்களில் உள்ள மீனைப் பிடித் துப் பனங்க ருக்குத் தீயில் தீய்த்து உண்டும், புதிய மதுவை உண்டும், பசி தீராதபோது, தெங்கிளங் காய்களை வேண்டு மட்டும் வெட்டிப்பருகிப் பசியாறி மகிழ்வதற்கேற்ற வளமார் வாழ்வில் நிறுத்து வாயாக ! உன் மறதியால், கால்கள் நான்கே நடப்பெற்றுத், தழை இட்டு வேய்ந்த சின்னஞ் சிறு குடிசையில் கிடந்து உழல வேண்டி நேர்ந்து விடாமல், மாறாக, தாம் வாழ்வதோடு அமையாது. தம்மை நாடிவருவார் அனைவரையும், அவர் வறுமை தீர்த்து வளமார் வாழ்வில் வாழ்விக்கவல்ல பெருவளம் உடையராக வாழ்விப்பாயாக' என அறிவுறுத்திப் பாடிய புறநானூற்றுப் பாட்டும் அதுவே கூறுகிறது என்பதும் உண்மை.

'நெல்விளை கழனிப் படுபுள் ஒட்புநர் ஒழிமடல் விறகின் கழிமீன் சுட்டு வெங்கற் தொலைச்சியும் அமையார், தெங்கின், இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு பெற்றனர் உவக்கும் நின்படை கொள் மாக்கள் பற்றா மாக்களிற் பரிவு முந்துறுத்துக் கூவை துற்ற நாற்கால் பந்தர்ச் சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு உதவியாற்றும் நண்பின் பண்புடை - ஊழிற்றாக நின்செய்கை!" - புறம். 29. படைவீரர்களை வளமார் வாழ்வில் நிறுத்த வேண்டியது பேரரசர் கடனாம் என்பதைப் பலரும் வற்புறுத்தியுள்ளனர் என்பது உண்மை. ஆனால்,