பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசறை அமைப்பு 49

ஈண்டு, களிறுகள், செல்வச் செருக்கால் உணவு வெறுத்து நின்றன எனக் கொள்ளும் பொருளினும், நாற்சந்தியில் நிறுத்தித் தம்பால் ஒப்படைத்திருக்கும் கர்வல் பொறுப்பில் கருத்து ன்றி நின்றுவிட்டமையால், அவற்றை உண்ணாது வெறுத்தன எனக் கூறும் பொருளே சிறப்புடையதாகும்;

காதற் பிடியைக் கண்ணுற்றதும் கணப்பொழுதும் பிரியாது கூடிக்களிக்கும் இயல்புடையன களிறுகள் என்றாலும், போரில் புண்பட்ட நிலையில், அவை காதற் பிடியையும் மறந்துவிடும் கடமையுணர்வு உடையது என்பதைப், புலவர், இதே முல்லைப்பாட்டில், வேறு ஒர் இடத்தில் கூறும் பிடிக்கணம் மறந்த வேழம்' என்ற தொடரும் வற்புறுத்துவது காண்க.