பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசறைக்கண் அரசன் தனி இருக்கை

பாசறை அமைத்து, நாற்படையாளர்க்குத் தனித்தனி இருக்கைகள் அமைத்து முடித்த பின்னர், அரசன் இருத்தற்கு ஏற்புடைய இருக்கை அமைக்கும் பனி மேற்கொள்ளப்படும். அரசனுக்கு உரிய இடம், தனித்து இருக்க வேண்டும் என்றாலும், அதை, அப்பாசறையில் எங்கோ ஒரு கோடியில் அமைத்து விடுதல் கூடாது. தன் பாதுகாப்புப் பற்றிய சிந்தனையே இல்லாமல், அரசன் சிந்தனை எல்லாம் போர் பற்றிய, தாகவே இருக்கவேண்டுமாயின், அவன் இருக்கை, காவல் மிக்கதாக Jojóð) LD ii_! .ே வ ண் டு ம்ெ ன் ப ைத, உணர்ந்திருந்தமையால், நாற்படையாளர் இருக்கை களுக்கு நடுவானதான் ஓர் இடத்தையே, அதற்காகத் தேர்ந்து கொள்வர். ஆங்குக், கோட்டையைச் சூழச், சுற்று மதில் அமைப்பது போல், குத்துக் கோல்களை வரிசையாக நட்டு, அவற்றில் பிணித்த பல் வண்ணத் இரைச் சீலைகளையே சுற்றுச் சுவராக்கிக் கொள்வர். ஆங்கு , அரசின், இரவுபகல் எனப் பாராது எப்போதும் போர் பற்றிய சிந்தனையும் செயலுமே மேற்கொள்ள வேண்டியிருக்குமாதலால் அவ்விடம், இரவிலும் பகலே போல் ஒளி விட்டிருக்கும் வகையில், அவ்விடமெங்கும் கையில் விளக்கேந்தி நிற்க, வனையப்பட்ட பாவைகள் நித்திவைக்கப்பட்டிருக்கும் அப்பாவை விளக்குகளில், பெருங்காற்று வீசினாலும் அலைப்புண்டு அவிந்து போகாது நின்று எரியவும். பேரொளி காலவும் தடித்த திரிகளையே தேர்ந்தெடுத்து இட்டிருப்பர். அவ் விளக்குகள் , ஒரோவழி அவிழ்ந்து விடுமாயின் அக்கணமே அவற்றைக் கொளுத்தி எரியப் பண்ண, சிற்றேவலர் பலர் அமர்த்தப்பட்டிருப்பர். அப்பணிக்கு ஆடவர் நியமிக்கப் படுவராயின், போர்க் களம் புகவேண்டிய ஆடவர்தொகை போர்க்களத்தில் குறை நேர்ந்துவிடும் مسا الساط يقته تني