பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசறைக்கண் அரசன் தனி இருக்கை 5 。

என்பதாலும், நாட்டு மகளிர், மனைகளில் மட்டுமே விளக்கேற்றக் கற்ற மெல்வியலாராதல் கூடாது , போர்க்களத்துப் பாசறை கண்ணும் விளக்கேற்றக்கற்ற வன்மையாளராதல் வேண்டும் என்பதாலும், அப்பணிக்கு ஆடவர்ை நியமிக்காமல் மகளிரையே நியமித்திருப்பர். குற்றேவல் புரிய அமர்த்தப்பட்ட அம் மகளிரும், கைகளுக்குப் பொற்றொடி பூட்டிக் கொள்ள வல்லச் செல்வச்செழுமையும். சிறு முதுகுக்கு அழகூட்ட அம்முேதுகில் கிடந்து அசைதற்கேற்ப நீண்ட அடர்ந்த கூந்தலுக்கு உரியராம் அளவு உடல்வளமும் வாய்க்கப் பெற்றவராகவ இருப்பர். ஏற்ற பணி, விளக்கேற்றி வைப்பதே என்றாலும், அவர் பணி மேற்கொண்டிருக்கும். இடம், ப்கைநாட்டை அடுத்த பாசறை. அதுவும் அரசன் உறையும் உள்ளிருக்கை. ஆகவே, அவர்கள், பகைப் படையிலிருந்து தம்மையும் காத்துக் கொள்ள வேண்டும்; அப்பாசன்ற உள்ளாரையும் காக்க வேண்டி நேரிடின், அதுவும் மேற்கொள்ள வேண்டும். அதனால் அவர்கள் இறுக் அணிந்திருக்கும் மேல் சட்டையாம் கச்சோடு. வா ட் ப ைட யி ைன யு ம் தவறாது பிணித்துக் கொண்டிருப்பர். அவ்வாட் படைகளும், எத்துணை ஓங்கி வீசினாலும் முறிந்து போகாத் திண்மை வாய்ந்த பிடி உடையனவாயிருக்கும். அடி முதல் முனை வரை வெண்ணிறமே காட்டுமாறு நன்கு திட்டப்பட்டிருக்கும். வாளின் வெண்ணிறத்தால் வெளிப்படும் ஒளி, இரவையும் பகலாக்க வல்ல பேரொளியாகும். அந்த அளவிற்கு மெருகு ஏற, அவை நன்கு தீட்டப்பட்டிருக்கும். அத்தகு இளமங்கையர், விளக்குகளில் எண்ணெய் குறையுந்தோறும், எண்ணெய் வார்த்து நிரப்பவும், அவிந்து போகும் விளக்குகளை அக்கணமே கொளுத் தி: ஒளியூட்டவும், எண்ணெய் நிறைந்த சுரையும், தீப்பந்தமும் கையராய் வலம் வந்துகொண்டேயிருப்பர்,

"வேறுபல் பெரும்படை நாப்பண் வேறோர் நெடுகாழ்க் கண்டம் கோலி அகம் நேர்பு,