பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு

குறுந்தொடி முன்கைக் கூந்தலம் சிறுபுறத்து இரவு பகல் செய்யும் திண்பிடி ஒள்வாள் விரவு வரிக் கச்சில் பூண்ட மங்கையர், - நெய்உமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளிஇக் கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட’’ -

(43-49)

(வேறுபல் பெரும்படை. நாப்பண்-வேறுவேறு ஆன பல பெரும்படைகளின் நடுவே ; நெடுங்காழ் கண்டம் கோலி - நாட்டியிருக்கும் நெடிய குத்துக்கோல்களில் திரை ச்சீலையை மதில்போல் வளைத்துக் கட்டி ; வேறு ஒர் அகம் நேர்பு-அரசனுக்கு வேறு ஆன ஒர் இருக்கையை ஆக்கி : குறுந்தொடி முன்கை சிறுசிறு தொடிகளை அணிந்த முன்கையினையும் . கூந்தலம் சிறு புறத்து - கூந்தல் அசைந்து அழகு செய்யும் சிறிய முதுகினையும் உடைய , இரவு பகல் செய்யும் - இரவைப் பகலாகச் செய்ய வல்ல ஒளி வீசும் , திண் பிடி ஒள்வாள் - திண்ணிய பிடியையும் கூர்மையால் ஒண்மையினையும் உடைய வாளை ! விரிவு வரிக் கச்சில் - வரிந்து கட்டிய மேலணியாம் கச்சில், பூண்டி மங்கையர் - கட்டிக் கொண்டிருக்கும் மகளிர் , நெய் உமிழ் சுரையர் - எண்ணெய் வார்க்கும் திரிக்குழாய் உடையராய் , நெடுந்திரிக் கொளிஇ - நீண்ட திரின்ய இட்டு ; கையமை விளக்கம் நந்து தொறும் மாட்ட - பாவை விளக்குகள் அவியுந்தோறும் கொளுத்தி நிற்க.)

மெய் காப்பாளர்

நாடாளும் மன்னவன் எவ்வளவுதான்் நல்லவனாக இருந்தாலும், அவனையும் பகைத்து நிற்பார் இருக்கவே செய்வர். அப்பகைவரால் அரசனுக்கு எந்நேரத்திலும் ஊறு நேர்க்கூடும். ஆகவே, அரசனுக்கு அத்தகைய ஊறு நேராவாறு அவனை, அவன் நிழல்போல் சூழ்ந்து நின்று, காக்கவல்ல வீரர் சிலர் இருக்க வேண்டுவது