பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்காப்பாளர் 5霊

இன்றியமையாதது. அத்தகைய மெய்காப்பாளராம் பொறுப்பினை எவரிடம் .ே வ ண் டு மா யி னு ம்

ஒப்படைத்தல் இயலாது அரசனுக்கு ஊறு விளைவிக்க வருவார் மிகப் பெரிய வன்மையாளர் எனினும், அவரையும் அழித்து அரசனைக் காக்க வல்ல பேராற்றல் வாய்ந்தவராக மெய்காப்பாளா இருக்க வேண்டுவது இன்றியமையாததே. ஆனால் அது மட்டும் போதுமான தன்று: அரசனுக்கு ஊறு நேர இருப்புழி, அதைத் தவிர்க்கும் முயற்சியில் தம் உயிரே போய்விடும் என்றாலும், அது குறித்துக் கவலாது, அது செய்யத் துடிக்கும் தூய உள்ளம் உடையராதல், நனி மிக இன்றியமையாதது. அத்தகைய தூய உள்ளம், அரசன் பால் அளவிறந்த அன்பும் ஆசையும், பற்றும் பாசமும் உடையவர்க்கு மட்டுமே உண்டாம். ஆகவே அத்தகைய அன்பும், ஆசையும் பற்றும் பாசமும் கொண்டவர் களையே, அரசர் தம் மெய்காப்பாளராகத் தேர்ந்து கொள்வர். அவர் பால் அவை குறைவரக் குடி கொண்டுள்ளன என்பதை அவரோடு கொள்ளும் குறுகிய காலத் தொடர்பால் உறுதி செய்து கொள்வது இயலாது. அரண்மனையில் பல்லாண்டுக்காலம், பல்வேறு துறை களில் பணிமேற்கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு நிலையிலும் அவர்தம் செயல் முறைகளைக் கொண்டே அதை உறுதி செய்ய இயலும். அதனால், அத்தகைய மெய்காப்பாளர்,ஆண்டாலும், அறிவாலும், அன்பாலும், அறநெறிகளாலும் முதிர்ந்தவர்களாகவே இருப்பர். -

முல்லைக்காட்டில், வெண்ணிறப் பூக்கள் மலர்ந்து கிடக்க, மோசி மல்லிகைக் கொடி படர்ந்த சிறு சிறு துாறுகள், மெத்தன வீசும் மென்காற்றுக்கு ஏற்ப, அசைந்தாடும் காட்சியை நினைவூட்டும் நிலையில், தூய வெண் துகிலால் ஆன தலைப்பாகையும், மேனி போர்த்த சட்டையும் உடையராய், ஆண்டு முதும்ை யாலும், உறக்க மயக்கத்தாலும் தள்ளாடித் தள்ளாடி, நடைபயிலும் அம்மெய் காப்பாளர், 'பணி ஓய்ந்து