பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎会 முல்லைப்பாட்டு

விட்டது : உறங்கச் செல்லுங்கள் எல்லோரும் என்ற ஆணையை, மணி ஒலித்து அறிவிக்க எல்லோரும் அமைதியாக உறக்கம் மேற்கொண்டுவிட, ஒலி அவிந்து கிடக்கும் நள்ளிரவிலும், உறக்கம் கண்களைத் தழுவவும் உறங்காது, அரசனுக்குக் காவலாய், அவனையே சூழ்ந்து உலா வருவா.

"நெடுநா ஒண்மணி நிழத்திய நடுநாள்

அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர், சிதர்வரல் அசைவளிக்கு அசைவந்தாங்கு

துகில் முடித்துப் போர்த்த துரங்கல் ஓங்கு நடை பெருமூதாளர் ஏமம் சூழ (50-54)

நெடுநா ஒண்மணி - நீண்ட நாக்கினை உடைய ஒள்ளிய மணியின் ஓசை; நிழத் திய நடுநாள் - அடங்கிய நள்ளிரவில் அதிரல் பூத்த - மோசி மல்லிகை மலர்ந்த : ஆடுகொடிப் டாஅர் - அசைகின்ற கொடிகள் படர்ந்த சிறு தூறுகள்; சிதர்வரல் அசைவளிக்கு - மெத் தென வீசும் காற்றுக்கு அ ைசவந்தாங்கு- ஆடுவதுபோல் : துகில் முடித்துப் .ே பார் த் த வெண்துகிலால் தலைப் பாகை கட்டி மேனியைச் சட்டையிட்டுப் போர்த்திக்கொண்ட தூங்க்ல் - தளர் நடையினையும் 3. ஓங்குநடை - உயர்ந்த ஒழுக்கத்தினையும் உடைய : பெருமூதாளர் - மிக முதிர்ந்த மெய்காப்பாளர் ஏமம் சூழ - அரசனுக்குக் காவலாகச் சூழ்ந்து நிற்க.

நெடுநா ஒண் மணி நிழற்றிய நடுநாள் எனப் பாடங்கொண்டு, 'மணி எறிந்து விட்ட நடுநாள்' எனப் பொருள் கொள்வர் நச்சினார்க்கினியர். "பாசறையுள்ளார் இனி, பள்ளிபுக்குக் கண்ணுறக்கம் கொள்வாராக" என அறிவிக்கும் அறிவிப்பாக மணி ஒலித்தது எனக் கூறுவது அவர் கொள்கை போலும்