பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாழிகைக் கணக்கர் 、55

நாழிகைக் கணக்கர்

நாடாளும் அரசர்க்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாழிகையும் விலைமதிக்க ஒண்ணாச் சிறப்புடையன. இன்ன பணி, இன்ன நாளில், இன்ன நாழிகையில் முடிக்கப்படவேண்டும் என முறை வகுத்துப், பணி யாற்றக்கடமைப்பட்டவன். ஆகவே, கடந்துபோன கால அளவு. அவன் கருத்தில் எப்போதும், பசுமையாக இருந்து கொண்டேயிருத்தல் இன்றியமையாதது. ஆனால், காலம் காட்டும் கருவி இல்லாத காலம். என்றாலும், காலம் காணும் வழிமுறையினை அக்காலத்தவர் அறியாது விட்டாரல்லர். -

ஒருகலத்தில் நிறைத்து வைக்கும் நீரைச், சின்னம் சிறு துளை வழியாகச் சிறுகச் சிறுகக் கசிய விட்டு, அவ்வாறு கசியும் நீரை, அவ்வப்போது அளந்து காண்பதன் மூலம், நாழிகைக் காணும் முறை யொன்றினைப் பழங்காலத்தினர் அறிந்திருந்தனர். அக்கருவிக்குக் குறுநீர்க் கன்னல் என்பது அவர் இட்ட பெயர்.

கசியும் நீரை, அவ்வப்போது அளந்து நாழிகை அறிவிப்பதற்கென்றே சிலர் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்கள் அதில் செய்யும் சிறு தவறு, அரசன் செயல் முறைகளையே அடியோடு தகர்த்துவிடுமாதலின், அளந்து கணக்கிடுவதில் ஒரு சிறிதும் தவறு செய்யாத சிறந்த கணக்கர்களையே தேர்ந்தெடுத்து அவர் புர்ல், அப்பணியை ஒப்படைத்து வைப்பர். அவர்கள். கருத்தெல்லாம், நாழிகை காணும் அது ஒன்றிலேயே ஒன்றிவிடுவதால், அவர்கள் அத்துறை அல்லது வேறு துறைகன்ளக் கற்க விரும்புவாரல்லர். . . ; “... . . . . . . . . . . . . .

இவ்வாறு நாழிகை அறிவிக்க வேண்டுவது, அமைதியான அரசியல் பணிகள் நடைபெறும் அரண்மனை வாழ்க்கையினும், பகைப்படையைக்,