பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 முல்லைப்பாட்டு

காலம் அறிந்து, அக்காலத்தைத் தவற விடாது விழிப்பாயிருந்து தாக்கவேண்டிய .ே ப ா ர் க் க ள வாழ்க்கைக்கே, மிகமிகத் தேவை. அதனால், பகைநாட்டு எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் பாசறையிலும், நாழிகைக் கணக்கர், குறுநீர்க் கன்னலோடு வந்திருந்து, மேற்கொள்ளும் ஒவ்வொரு பணிக்காம் நாளினையும், நாழிகையினை யும் வரையறுத்துப் பணிபுரியும் அரசன் முன், கைகூப்பித் தொழுதவாறே சென்று, அவன் கருத்தைத் தம்பால் ஈர்க்கும் கருத்தோடு வாழ்த்தி, கடந்துபோன நாழிகை இவ்வளவு என்பதை, ஒவ்வொரு பணி தொடக்கத்திலும் அறிவுறுத்திக் கொண்டே இருப்பர்;

'பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்,

தொழுது காண் கையர் தோன்ற வாழ்த்தி எறி நீர் வையகம் வெவீஇய செல்வோய் ! நின் குறுநீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப'

. . . - (55-58) (பொழுது அளந்து அறியும் - நாழிகையை அளந்து அறியும் , பொய்யா மாக்கள் - தம்தொழிலில் பொய்த்துப் போகாத நாழிகைக் கணக்கர் ; தொழுது காண்கையர் - தொழுது காண்பதற்கேற்ப கூப்பிய கையினை உடையராய் ; தோன்ற வாழ்த்தி - தாம்

இருப்பது அரசனுக்குத் தோன்றுமாறு வாழ்த்தி : எறிநீர் வையகம், வெலி இய செய்வோய் - அலைவீசும் கடல் சூழ்ந்த உலகில், பகை வெல்ல, படையோடு செல்லும் அரசே ! நின் குறுநீர்க் கன்னல் - உன்னுடைய குறுநீர்க் கன்னல் காட்டும் நாழிகை. இனைத்து என்று இசைப்ப - இத்துணையாம் என்று எடுத்துக் கூற )

'பொழுது அளந்து அறியும் பொய்யாமாக்கள் தொழுது காண்கையர்' என்ற தொடரை, மாக்கள் பொழுது அளந்து அறியும் பொய்யாக் காண்கையார்’