பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாழிகைக் கணக்கர் 57

என மாற்றி, அறிவில்லாதோருடைய வாழ்நாளை இத்துணை என்று அறிந்து அறியும் பொய்யாத காட்சியை உடையார்' எனப்பொருள் கூறியுள்ளார் நச்சினார்க்கி னியர்.

.ெ த ா ல் கா ப் பி ய ம், மாவும் மாக்களும் ஐயறிவினவே” எனக் கூறுகிறது என்றாலும், 'கலந்தரு திருவின் புலம் பெயர் மாக்கள்' (சிலம்பு : 5 , 11, 6 : 1.30) பட்டின மருங்கில் படைகெழு மாக்கள்' (சிலம்பு : 5 , 17) 'வம்பமாக்கள் தம்பெயர் பொறித்த" (சிலம்பு : 5 : (1) பெரு நீர்போகும் இரியல் மாக்கள் : (சிலம்பு 6 : 112 : பெரும்பாண் : 482) 'பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்கள் (மணி : , 16) "இரவன் மாக்கள்' (புறம் : 328 : 4 ; 333 : 1) எனவரும் இடங்களிலெல்லாம் பெருந்திரளாகக் கூடியிருக்கும் மக்கள் தொகுதியை, மாக்கள்' என்றே ஆசிரியர் பலரும் குறிப்பிட்டுள்ளனர். ஆகவே, ஈண்டு, மாக்கள். என்ற சொல்லுக்கு அறிவிலாதோர் எனப்பொருள் கொள்வதும், அ ப் .ெ பா ரு ள் கொண்டமையால், பொழுது', மக்கள்' என்ற சொற்களை மக்கள் பொழுது என இடமாற்றிப் போட்டு, அறிவிலாதோர் வாழ்நாள் எனப் பொருள்கொண்டு நாழிகைக் கணக்கர் செயலைக், கணி கூறுவோர் செயலாக மாற்றிப், பொருள் கொள்வதும் தேவையில்லை.

இருநில மருங்கின் மன்னர் எல்லாம் நின்

திருமலர்த்தாமரைச் சேவடி பணியும்

முழுத்தம் ஈங்கிது' எனச் சிலப்பதிகாரத்தில் வருவது போல் (சிலம்பு 26: 2830) ஆகும் காலம், ஆகாக் காலம் அறிந்து கூறும் நாழிகைக் கணக்கரும், அரசர்களைச் சார்ந்திருப்பர் என்றாலும், ஈண்டு, 'பொழுதளந்தறியும் பொய்யா மாக்கள்' என்பது நாளின் ஒவ்வொரு கூற்றினையும்