பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 முல்லைப்பாட்டு

அறிந்து கூறுவாரையே குறிக்கும் என்பது :குறுநீர்க் கன்னல் இனைத்து என இசைப்ப' என்ற தொடரால் உறுதியாவது காண்க.

' குறுநீர்க் கன்ன ல் எண்ணுதல் அல்லது

கதிர்மருங்கு அறியாது’ -அகம் 43 : 6-7.

'குறுநீர்க் கன்ன லின் யாமம் கொள்பவர்'

-மணிமேகலை 7 65.

என்ற தொடர்கள், குறுநீர்க் கன்னல், எனும் காலம் காட்டும் கருவி, நாளின் கூறுகளைக் காட்டுவதல்லது, மக்களின் ஆகும் காலம், ஆகாக் காலங்களைக் காட்டுவ தில்லை என்பதை உறுதி செய்தல் காண்க. -

காட்டகத்தே அமைந்த அப்பாசறைக்கண். நாற்படை வீரர்களின் இருக்கைக்கு நடுவண், அரசனுக்கு எனத் தனியிடம் ஒன்றை வகுத் திருந்தனர் என்றாலும், அதுவும் மெய்காப்பாளராம் பெரு மூதாளரும், பொழுதறிந்து உரைக்கும் பொய்யாமாக்களும் ப்ோர் வாளும் இருத்தற்கு ஏற்ற போரிடமாகவேயிருக்கு மாதலின், அரசன் தனித் திருந்து நடந்தன T6ಕTಾ, நடப்பன சிந்தித்தற்கு உரிய இடமாக அதனுள்ளும் ஒரு சிறிய மறைவிடம் இருக்க வேண்டுவது இன்றியமை யாதது என உணர்ந்திருந்தனர். - -

தமிழகத்துப் பேரூர்களில், அரசன் பெருங்கோயில் போலும் பெருமாளிகைகளை வகுப்பதில் தமிழ்நாட்டு வினைஞர்களுக்குத் துணையாக. நாவலந்தீவின் பிற பகுதிகளிலிருந்து வந்து பணிபுரியும் மகத வினைஞர். டிராட்டக் கம்மர், அவந்திக் கொல்லர்களைப்போலவே, கடல் கடந்த நாட்டினின்றும் வந்து பணிபுரியும் யவனத் தச்சரைக் கொண்டு, அவ்விடம் வகுக்கப்பட்டிருந்தது.