பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாழிகைக் கணக்கர் 59

போர் ஓய்ந்து அமைதி நிலவும் காலங்களில் கட்டிடக் கலையில் ஆர்வம் காட்டும் யவனர், போர்க் கால்த்தில் சிறந்த குதிரை வீரர்களாகத் திகழ்ந்தன்ர். குதிரை வீரர்களான அவர்கள். குதிரைகளை ஒட்ட ஆதவும் வாரால் ஆன சவுக்கு எனப்படும் சம்மட்டியை, எங்குச் சென்றாலும் உடன் கொண்டே செல்வர். சவுக்கை உடன் கொண்டு செல்வர் என்றால், அதை எப்போதும் கையிலேயே ஏந்தியிருப்பாரல்லர். தேவைப் படும்போது எளிதில் எடுத்துப் பயன்படுவதற்கு ஏற்ப, அதைத், தம் இடையைச் சுற்றி ஆடைக்குள்ளாக வளைத் துப் பிணித்துக் கொண்டிருப்பர். மகளிர் ஆடையாம் சேலைபோலும் நீண்ட ஆடையை, இடைச் சுற்றளவே இருக்குமாறு மடித்து வைத்துப் பாவாடை போல் தைத்து அணிந்து கொள்ளும் வழக்கம் உடையவர் யவனர். உள்ளே குதிரைச் சம்மட்டிச் சுற்றிக் கிடக்க, அது மறைய அதற்கு மேல், மேலே கூறிய அமைப்புடைய ஆடையை அணிய, அது அவர் இடையில் வீங்கிப் புடைத்துக் காணப்படும். உடுத் திருக்கும் அவ்வாடைக்கு மேல், மெய் மறைய சட்டையும் அணிந்திருப்பர். இயல்பாகவே வலி கூடி முறுக்கேறிய உடல் அமையப் பெற்ற யவனர்; அதற்கேற்ப, படைக்கு அஞ்சாப் ப்ேராண்மையும் உடையராவர்; இத்தகு உடல் உரமும், உடை அலங்காரமும் உடைமையால், தோற்றமே அச்சம் ஊட்டுவதாக இருக்கும். அவர்கள் அரசன் அமைதியாக இருந்து சிந்திக்க அமைத்த அறைகள், பாராட்டுக்குரியவாகும். யவனர் புகழ்பாடும் பான்வவிளக்குகளேபோல், அவர் கை வண்ணச் சிறப்புக் க்ாட்டும் புலிச் சங்கிலிகளைக் கொண்டு ஒப்பனை செய்யப்பட்ட அந்த நல்ல இல்லத்தை, அரசன், தம் அமைச்சர் உள்ளிட்ட கருமத் தலைவர்களை அழைத்துப் பேச உதவும் புற அறையும், தனித்து இருந்து ஒய்வு கொள்ள உதவும் அக அறையும் உடையனவாகத் திண்ணிய கயிறுகளில் தைக்கப்பட்ட திரைச்சீலைகளைக்