பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 முல்லைப்பாட்டு

கொண்டு வளைத்து வகுத் திருப்பர். அமைச்சர் உள்ளிட்ட அகக்கணத்தார் மட்டுமே சென்று வரும் உரிமை மிக்க ஆங்கு, விளக்கேற்றி ஒளியூட்டும் மகளிரும் செல்லுதல் கூடாது என்பதால், ஆங்கு தன் இயற்கைப் பேரொளி யாலேயே ஒளியூட்டும் மாணிக்கக் கற்களை அமைத்து வைப்பர்.

х அரசன் தனித்து உறையும் பள்ளியறையே வாயினும், அரசன் விரும்பினால் விரும்புவோர்க்குச் சென்று செய்தி கூறவும், அரசனுக்குத் தேவைப்படும் உண்ணு நீர் போல்வன கொணர்ந்து கொடுக்கவும், ஏவலர் சிலர், ஆங்கும் இருப்பது இன்றியமையாதது. அதனால், ஆங்குச் சில ஏவலரும் இருந்தனர். இடமோ, நாட்டு தலம் காக்கும் நல்ல் சிந்தனைகள் உருவாகும் இடம். அது உருவாக, அமைச்சர் உள்ளிட்டார் தத்தம் உணர்வுகளை உரைவடிவில் வெளிப்படுத்தும் இடம். அத்தகைய இடங்களில் பணிபுரியும் ஏவலர், ஆங்கு அரசர் அமைச்சர்களிடையே உரையாடல் நிகழுங்கால், தம்காதுகளில் விழுந்தனவற்றை வாய்தவறி வெளிப் படுத்திவிடுவராயின், அதனால் அரசுக்கும் நாட்டிற்கும் பெருங்கேடு விளைந்துவிடும். அதனால், ஆங்கு அமர்த்தப்படும் ஏவலர்கள், இந்நாட்டு அரசியலில்: ஆர்வம் காட்டும் தேவையற்ற அயல்நாட்டவராகவும், ஒரோவழி அதில் ஆர்வம் கொண்டு, கேட்டவற்றிைக் கறவிரும்பினும், கூறமாட்டா ஊமையாகவும் இருப் பவர்களை மட்டுமே தேர்ந்து அமர்த்திக் கொள்வர்.

'மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை

மெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர், புலித்தொடர்விட்ட புனைமான் நல்லில்