பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,6玄” முல்லைப்பாட்டு

தாகவே இருப்பதால், அகவறையாம் பள்ளியறையில் உள்ள படுக்கைக்குச் சென்றும், அரசன் கண்கள் உறக்கம் பெறாவாயின. அன்றைய போரில், பகை வீரர் எடுத்தெறிந்த வேற்படை விரைந்து வந்து பாய்ந்ததால் புண்பட்டு, அப்புண்தரும் கடும் நோயால், காதல்பிடியானைகளையும் மறந்து வருந்திக் கிடக்கும் வேழங்களின் நிலைகளை நினைத்தும், பகைப்படையைச் சேர்ந்த யானைகளின் பருத்து நீண்ட கைகள், அடியுண்ட மலைப்பாம்பு துடிப்பதுபோல் வெட்டுண்டு வீழ்ந்து துடிக்க, அவ்வேழப்படையை அழித்து வெஞ்சமீர் புரிந்து, பகையரசர் மண்கருதிப் போர்தொடுப்பார் அணியும், தலைமாலையாம் தேன்துளிக்கும் புது மலர் களால் ஆன வஞ்சி மாலைக்கு, நல்ல வெற்றியை உண்டாக்கியதன் மூலம், செஞ்சோற்றுக் கடன் கழித்து விட்டு, உயிர் இழந்துபோன வீரர்களை நினைந்தும், பகைவீரர்களின், ஏவும் அம்பு, எறியும் வேல், வீசும் வாள் இவைகளால் ஊறு நேராவாறு, உடல் மறையப் போர்த்திவிடும் தடித்த தோலால் ஆன பரிசையும் போழ்ந்து கொண்டு, பகைப்படையைச் சேர்ந்த வில் வீரர்கள் ஏவிய அம்புகள், உடலில் ஆழப் பாய்ந்து, விடவே, அந்நோய் மிகுதியால் பசிதீரப் புல் உண்பதும் மறந்து, மண் மீது செவிசாய்த்து வீழ்ந்துவிட்ட குதிரைகளை நினைந்தும், ஒருகையைப் படுக்கையில் ஊன்றி இருந்து, கைக்கடகமும் தலை முடியும் அடுத்த்டுத்துக் கிடக்குமாறு, ஒரு கையால் தலையைத் தாங்கிக்கொண்டு, போரில், படை அவ்வாறு அழிவுண்ட தற்காம் காரணங்களை ஆராய்ந்து அறிந்து, இனிவரும் போரில், படை அவ்வழி வுக்கு உள்ளாகாவாறு வெற்றி கொள்ளத்தக்க வழி வகைகளைத் துணிந்து முடிவு செய்ய நெடிது சிந்தித்து, அச்சிந்திப்பின் முடிவில், நாளை, தான்் மேற்கொள்ள எண்ணிய போர் முறை களால் வெற்றி வாய்ப்பு உறுதி என்ற தெளிவு பிறந்து: விடவே, பகைவரின் அப்படை, அழிக்க இப்படையை