பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாழிகைக் கணக்கர் 6 3.

எனத் தேர்ந்து தேர்ந்து கொண்ட படைக்கலங்களையே ஏந்தி ஏந்திக், காழ்ப்பேறி உரம்பெற்ற கைவிரல்களால், எப்போதும் வெற்றிப் புகழே தரும் பெருமைமிகு வஞ்சி மலர்களால் ஆன தலைமாலையை, வெற்றிச் சிறப்பு விளங்க நன்கு சீர்செய்துகொண்டு, பகையரசர்களை அவர்கள் இருக்கும் அவர்தம் அரணகத்தே இருந்தும் நடுங்கப்பண்ணும் வெற்றி முரசு முழங்கா நின்ற அப்பாசறைக்கண், வெற்றி உறுதி என்ற நினைவுணர்வு அளித்த இன்ப உணர்வு மேலோங்க, சிறிதே துயில் கொள்வானாயினன்.

மண்டு அமர் நசையோடு கண் படை வெறா அது "எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண்கூர்ந்து

பிடிக்கணம் மறந்த வேழம், வேழத்துப் பாம்பு பதைப்பு அன்ன பரூஉக்கை துமியத் தேம்பாய்கண்ணி நல்வலம் திருத்திச் - சோறுவாய்த்து ஒழிந்தோர் உள்ளியும், தோல்துமிபு' வைந்துனைப் பகழி மூழ்கலின் செவிசாய்த்து உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும், ஒருகை பள்ளி ஒற்றி, ஒருகை - முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து பகைவர்ச் சுட்டிய படைகொள் நோன்விரல் நகைதாழ்கண்ணி நல் வலம் திருத்தி அரசு இருந்து பணிக்கும் முரசு முழங்கு பாசறை இன்துயில் வதியுநன்’ (67-80) மண்டு அமர் நசையோடு - பகைவர்மேல் பெரும் படையோடு செல்லும் போரை விரும்புதலானே : கண்படை பெறா அது - கண்ணுறக்கம் கொள்ளாமல் : எடுத்து எறி எஃகம் பாய்தலின் பகைவர் எடுத்து எறிந்த வேல் பாய்ந்ததனால் : புண்கூர்ந்து - புண். பெற்று ; பிடிக்கணம் மறந்த வேழம் - தம் காதற்