பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசறைக்கண் அரசன் தனி இருக்கை 莎莎

பகையரசர்கள் தம் அரணகத்தே இருந்தும் அஞ்சுதற்குக் காரணமாய முரசு முழங்கு பாசறை - வெற்றி முரசு முழங்கும் பாசறையின் கண்ணே - இன்துயில் வதியுநன் . வெற்றிகண்ட மனநிறைவால் இனிதே துயில் கொள்ளும் தலைவனுடைய.)

வினைமேற்சென்ற வேந்தன் சிந்தையெல்லாம் எடுத்த வினை பற்றியதாகவே இருந்துவிட்டமையால், பகை நாடு கொள்வான் வேண்டி வஞ்சி சூடிப் புறப்பட்ட நாள்தொட்டு, வெற்றி கொண்டு வாகை குடிய நாழிகை வரையும், அவனை அணுக அஞ்சியிருந்த உறக்கம், வந்த வினை முடித்த வெற்றிக் களிப்பில் ஆழ்ந்திருந்த அற்றம் நோக்கி, அவனைத் தழுவிக் கொள்ளவே. அவனும் சிறிதே உறக்கம் கொண்டுவிட்டான். r

கடமை மேற்கொண்டிருக்கும் காலத்தில் காதல் நினைவு. கடமையை இடையீடின்றி ஆற்றவிடாது அலைக்கழிக்குமாதலின், அக்காலத்தில் காதல் நினைவு கூர்தல் கூடாது என்பதை உணர்ந்தவன் அவன். "கிழவி நிலையே வினையிடத்து உரையார்’ என்பது தொல்காப்பியம். இதனால் ஏற்றுச் சென்ற வினை இனிதே முடியுங்காரும், அவன். தன்னை மறந்திருந்தது முறைதான்். ஆனால், மேற்கொண்டு சென்ற விளையில் வெற்றி கண்ட மறுகணமே, காதல் உணர்வு வீறுகொண்டு எழ, அவன் அடுத்த கணமே தன் அருகில் இருந்திருக்க வேண்டும் என எதிர்பார்த்தாள். "வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்' என்பது தொல்காப்பியம். ஆனால் வினை முடிவுற்ற பின்னரும் அவன் வரக் காணாமையால், பிரிவுத் துயர், அரசியைப் பற்றி வருத்தத் தலைப்பட்டுவிட்டது. * . . . or

. காதல்நோய், கரைகாணாக் கடல்போல், அளப்பரிய தாகியவிடத்தும், அந்நோயின் சிறுகூற்றினையும் பிறர் அறியாவாறு, தன்னுள்ளே அடக்கித் தாங்கிக்கொள்ளும் நிறையுடைமை, கற்புடையார்க்குப் பொற்பாம்

. 5 سدهttp