பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதை அறிவாளாயினும், தனிமை தந்த துயர் மிகுதி, அந்நிறையையும் அழித்துவிட்டது.

நல்லோர் பால் நீ ங் கா ம ல் நிற்கவேண்டிய நிறையழியும் நிலை வந்துற்றதும், அவள் விழித்துக் கொண்டாள். ஆழச் சிந்திக்கத் தொடங்கிவிட்டாள். பிரிவும் ஆடவர்க்கு ஒர் அழகு. அதிலும் அரசராகப் பிறந்தவர், இவ்வாறு போர் மேற்கொண்டு சென்றா லன்றி அரசு நடைபெறாது. வினையே ஆடவர்க்கு உயிர். அவ்வாறு ஆடவர் பிரிந்து சென்ற காலை, பிரியுங்கால் அன்னார் கூறிய சொல்லைத்தேறி ஆற்றி விருத்தல் மனையுற்ை மகளிர்க்கு மாண்பு. கருத்தொருமித்த காத்லர் இருவர்க்குரிய இக் கடமைகளை நினைவு கூர்ந்தாள். அந்நினைவு தன்னைத் தான்ே தேற்றிக்கொள்ள உதவும் நல்ல துணையாய்

ஆமைந்துவிட்டது. உடனே தன்னை ஒருமுறை பார்த்துக் கொண்டாள். கைவளை முதலாம் அணிகலன்கள் தாமே கழன்று உகலாயின. அவள்

உள்ளத் துயர், அவள் உடலை அந்த அளவு மெலிவித் திருந்தது. நிறையுணர்வு வரப்பெற்ற உள்ளம், காதல் நோயைப் பிறர் : உணராவாறு காத்துக் கொள்ளத் துடிக்கும் அந்நிலையில், கைவளைகளைக் கழலவிடுவதன் மூலம், உடல் மெலிவு தன். காதல் நோயைப் பலர் அறியப் பறைசாற்றுவது கண்டு துணுக்குற்றாள். அதை மறைக்க அவள் உடலுக்குப் பழைய உரத்தை அப்போதே ஊட்டிவிட முடியாது என உணர்ந்து கழன்று விழும் கைவளைகளை மேலே ஏற்றி இறுகச்செறித்துக் கொள்வதன் மூலம் மேனி மெலிவை மறைக்க முயன்றாள்.

காதல் உணர்வு, தனிமை நினைந்து துயர் செய்ய, கற்புணர்வு, காதலன் பிரிவு அவன் கடமையாதல் போல், அவன் வருங்காறும் ஆற்றியிருக்க வேண்டியது தன் கடமையாம் என அறிவுறுத்த, இருவேறு உணர்வு ளுக்கிடையே அகப்பட்டு அவள் செய்வதறியாது