பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளியறைக்கண் அரசமாதேவி 67

மயங்குவாளாயினள். அம்மயக்க நிலையால் ஏதும் செய்யமாட்டாத் தன் நிலையை நினைக்கவே, ஏக்கப் பெருமூச்சு விரைந்து வெளிப்படலாயிற்று. அம்பேறுண்ட மயில்போல் நடுங்கலாயினாள், ஆடையும் அணிகலன் களும் நெகிழ்வதும் அறியமாட்டாது படுக்கையில் வீழ்ந்து விட்டாள். . . .

காணும் இடமெங்கும் பொன்போலும் நவமணி களும், நெல்போலும் நவதான்ியங்களும் நிறைந்து சிறப்புற்ற, வானளாவ உயர்ந்த ஏழடுக்கு மாளிகையின் மேன் மாடத்துப் பள்ளியில் வீழ்ந்து கிடந்தாள். மாலைக் காலம் வரவே, பெருங்காற்றையும் எதிர்த்து நின்று எரியுமாறு பருத்த திரிகள் இட்டு ஏற்றிய பாவை விளக்குகள், அம்மாளிகையெங்கும் ஒளியூட்டிக் கொண்டிருந்தன. வேனிற் பருவத்துப் புதுமழை, பெரிய பெரிய தாரைகளாகவே கொட்டித் தீர்த்துவிடவே, அம்மாளிகையின் மேல்தளத்தில் கொட்டிய மழைநீர், அம்மாளிகையின் நாற்புறங்களிலும் உள்ள கூடல்வாய் வழியே உருண்டு வீழ்ந்து கொண்டிருந்தது. அவ்வருவி எழுப்பும் இனிய ஓசை. மயங்கிக் கிடப்பவள் காதில் புகுந்த அளவே, அது அவளை நினைவுலகிற்குக்கொண்டு வந்துவிட்டது. காதலன் குறித்துச் சென்ற கார்காலத் தொடக்கத்துப் புதுமழை என்பதாலும், நீண்ட வேனிற்பருவமெல்லாம், மழை காணாது வருந்தியவரும் உலகமும் மகிழச் செய்யும் முதல் மழை என்பதாலும்,

தன்னை மறந்தாள். அருவியின் இன்ப ஒசையில் மெய்மறந்து போனாள். . -

" கானாள் துயர் உழந்து

நெஞ்சு ஆற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு

நீடு நினைந்து தேற்றியும், ஒடுவளை திருத்தியும் மையல் கொண்டும், ஒய் என உயிர்த்தும்,