பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 முல்லைப்பாட்டு

ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து பாவை விளக்கின் பரூஉ:ச் சுடர் அழல, இடம் சிறந்து உயரிய எழுநிலை மாடத்து முடங்கு இறை சொரிதரும் மாத்திரள் அருவி இன் பல் இமிழிசை ஒர்ப்பனள் கிடந்தோள்'

. (80-88)

[கானாள் - கணவன் வருகையைக் காணாதவளாய்; துயர் உழந்து - துன்பம் உற்று நெஞ்சு ஆற்றுப்படுத்த - தன் நெஞ்சை அவன் பால் போகவிடுத்த நிறை தபு . நிறைகெட்ட புலம்பொடு - தனிமையால் நேர்ந்த வருத்தத்தோடு நீடு நினைந்து - நாடு, வீடு நலம். கருதிக் காதலன் பிரிய வேண்டிய கடமையையும், அவன் பிரிந்தவழி ஆற்றியிருக்கவேண்டிய தன் கற்பையும் நீள நினைந்து பார்த்து. தேற்றியும்-தன்னைத் தேற்றிக் கொண்டும் ; ஒடுவள்ை திருத்தியும் - கழலுகின்ற வளையலைக் கழலவிடாது திருத்திக் கொண்டும் ; மையல் கொண்டும் - மறுபடியும் மயங்கியும் ; ஒய் என உயிர்த்தும் - நெட்டுயிர்ப்புக் கொண்டும் ; ஏவுறு. மஞ்ஞையின் நடுங்கி - அம்பு ஏறுண்ட மயில்போல தடுங்கியும் ; இழை நெகிழ்ந்து - ஆடை அணிகலன்கள் நெகிழப்பெற்றும் : பாவை விளக்கின் பரூஉச் சுடர் அழல பாவை விளக்குகளில் இட்ட பருத்த திரிகள் பேரொளி காட்டி எரிய இடம் சிறந்து - இடத்தால் சிறந்து : உயரிய - உயர்ந்த எழுநிலை மாடத்து. ஏழடுக்கு மாளிகையில் : முடங்கு இறை - கூடல்வாய் இல்; சொரிதரும் - உருண்டு ஓடிவரும் மாத்திரள் அருவி - பெரிய தாரைகளாகக் கொட்டிய மழை நீராகிய அருவி எழுப்பும் : இன் பல் இமிழ் இசை - இனியவாய், பலவாக இசைக்கும் இனிய ஒசையினை : ஒர்ப்பவள் கிடந்தோள் - கேட்டு மயங்கியவளாய்க் கிடந்தவளுடைய.1 3 o. . . . . . . . . . . . .