பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனைநோக்கி மன்னவன் 6s

கார்காலத் தொடக்கத்துப் பெருமழை, காதலனை எதிர்நோக்கிப் பள்ளியில் வீழ்ந்து கிடக்கும் அவ் விளையோள் வாழிடத்தில் மட்டும் பெய்யவில்லை. வினை முடிந்த நிறை நெஞ்சோடு சிறிதே கண்ணுறங்கும் அவள் காதலன் பாசறை கொண்டிருக்கும் காட்டகத்தும் பெய்தது. மழைவரவு, அவன் உறக்கத்தைக் கலைத்து . التي سانشاته.

கண் விழித்துக் கொண்டான் காவலன் என்பதை அறிந்து கொண்டது அவன் நாற்படை. வெற்றிக்கு வழிவகுத்த பெருமைக்கு உரியது அப்படை வென்று கைக் கொண்ட நிலப்பகுதி, பயன்தாராமை கண்டு, பகையரசரால் வெறுத்துக் கைவிடப்பட்ட களரோ, கல்லாங்குத்தோ. கானல் தேர் ஒடும் பெரு மணல் பரப்போ அன்று. மாறாகச் செங்கரும்பும். செந்நெல்லும் செவ்வாழையும் விளைந்து வளம் கொழித்து, அப்பகை யாசரால் தம் உயிரினும் சிறந்ததாகப் போற்றப்படும் நன்செய் நிலப்பகுதிகளாம் அது. அத்துணை வளம் செறிந்தது ஆதலின், அதைப் பகைவர் எளிதில் இழந்து விடமாட்டார். தம் ஆற்றல் அனைத்தும் கொண்டு அதைக் காத்துக் கொள்ளவே முனைவர். அது அறிந்தே அதைக் கொள்ளக் கருதிய இளையோன், தன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைத் திருந்த படைகளையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு சென்றிருந்தான்். அவ்வாறு கொண்டுசென்றிருந்த அப்பெரும் படைகளனைத்தையும் போர்க்களத்தில் ஒரு முனையிலேயே பயன்படுத்தினா னல்லன். பகைவர் எப்பக்கமும் தப்பி'ஓடி விடாதபடி, நாற்புறமும் வளைத் துப் போரிடலே வெற்றிக்கு வழியாகும் என்பது அறிந்து, அப்படையைப் பல்வேறு அணிகளாகப் பிரித்து பகைநாட்டின் பல்வேறு நிலைகளிலும் நிறுத்தி வைத்துப் போரிட்டான். போரில் வெற்றி கண்ட அளவே அவையெல்லாம் தத்தம் முனைகளிலிருந்து மீண்டு ஒன்று திரண்டு விட்டன.