பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

yo முல்லைப்பாட்டு

அரசன் குறிப்பறிந்து பணிபுரியும் பக்குவம் பெற்றது அப்படை. வெற்றிகண்ட அரசன் உள்ளம், அவனை எதிர்நோக்கி மனையகத்தே காத்துக் கிடக்கும் அவள் மனையான்பால் விரைந்தோடத் துடிக்கும் என்பதை அறிந்து ஊர் நோக்கிப் புறப்படத் தொடங்கி விட்டது, படை வரவினைக் காண்பவர், இது போர்தொடுத்துப் போகும் படையன்று. வெற்றிகொண்டு மீளும் படை என்பதை அறிந்து பாராட்டுவதற்கு ஏற்ப, போரில் கண்ட வெற்றி குறித்து உயர்த்திய கொடி முன்னே ஏந்திச் செல்லப்பட்டது. வெற்றிக் கொடி நாட்டி மீள்கிறது நாற்படை என்பதை, அப்படை வரவை நேரில் காண்பார் மட்டுமே அல்லாமல், அதைக் காண மாட்டாச் சேய்மைக்கண் உள்ளாரும், உணர்ந்து மகிழும். ல் கையில் அவர் காதுகளிலும் சென்று ஒலிக்கும், கொம்பும் சங்கும் போலும் இசைக் கருவிகள் முழங்கலாயின. - ... ---- ; : . . . .

பாசறை விடுத்துப் புறப்பட்டுத் தன்னைக் கடந்து கொண்டிருந்த நாற்படைக்குக் கார்ப்பருவத்து மழை பெற்றுக் கலித்த முல்லைக்காடு, தன் காட்சி இன்பத்தால் களிப்பூட்டலாயிற்று. தன் வேர் பரவியிருப்பது, புது வெள்ளம்கொழித்த நுண்மணல் பகுதியாகவே, தழைத்து வளர்ந்து நெருங்க இலையின்று கிடக்கும் காயா, அஞ்சன வண்ணம் காட்டும் அழகிய மலர்களை மலர்வித்திருந்தது. இளம் தளிர்களைக் கொண்ட் கொன்றை மரங்கள், மாலை தொடுத்துத் தொங்க விட்டாற்போல் டிலர்ந்துதொங்கும் கொத்துக்களிலிருந்து பொற்காசுகளைச் சொரிவதுபோல், மஞ்சள் வண்ண மலர்களைச் சொரிந்து மகிழ்வூட்டி நின்றன. வெண்காந்தள் செடிகளில், |மலரும் பருவத்துப் பேரரும்புகள். அழகிய உள்ளங்க்ைகள் போல் மலர்ந்து அழகு காட்டலாயின. தோன் றிச் செடிகளின் அடுக் க்டுக்கான இதழ்களைக் கொண்ட மலர்கள், குருதிச் செந்நிறம் காட்டிச் சிறப்பூட்டின. х