பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனைநோக்கி மன்னவன் 亨盟

இவ்வாறு நீலம், மஞ்சள், வெண்மை, செம்மை ஆகிய் வண்ண வண்ண மலர்களை மலர் வித்துக் காடு வனப்பூட்ட, அக்காட்டை அடுத்திருந்த புன்செய் நிலங்களில், மழை வேண்டும் காலத்தில் வேண்டும் அளவே பெய்து துணை புரியவே, வளம் பெற விளைந்து கதிர்கள் முற்றித் தலை வணங்கிக் காட்சி தரும் வரகுக் கொல்லைகளில், தமக்கே இயல்பான மடப்பம் வாய்ந்த பிணைமான் கூட்டம், தம் மனதைக் கவருமளவு பேரழகு ஊட்டும், முற்றி முறுக்குண்ட கொம்புகளையுடைய கலைமான் கூட்டத்தோடு, மகிழ்ச்சி மிகுந்து ஆடித் திளைக்கலாயின. -

நாட்டின் வளத்தையும், காட்டின் வனப்பையும் கண்ணுற்ற அரசனும், அவன் நாற்படையும், இவற்றிற் கெல்லாம் காரணமாய் அமைந்தது, கால்த்தில் பெய்த மழையன்றோ என்ற உணர்வு எழவே, அம்மழைக்கு நன்றி தெரிவிப்பான் வேண்டி, அது வழங்கும் வானத்தை

நோக்கினர். ஆங்குக் கொண்டல் கொண்டலாக வெண்முகில் கூட்டம், வரிசை வரிசையாக எதிரே விரைவது கண்டனர். அக்காட்சி அது கார் காலத்

தொடக்கமாம் ஆவணித் திங்கள் என்பதை அறிவுறுத்தி விட்டது. அவ்வளவுதான்், மனையில் காத்திருக்கும் அவள், இனியும் பொறாள். இப்போதே அவண் அடைதல் வேண்டும் என்ற எண்ணம் ஆட்டம் போடத் தொடங்கிவிட்டது.

உள்ளம்போல் உதவும் நல்லியல்புடையனவாதலின், இயல்பாகவே விரைந்து ஒடுவன் தேரில் ستا وا تائ குதிரைகள், அதேபோல், விரைந்து வீடடைய வேண்டின் புதுவழி காணவும் தயங்காதவன் தேர்ப் பாகன். அதனால், தேர் இயல்பாகவே விரைந்து கொண்டுத்ான் இருந்தது என்றாலும், போரில் பகைவரின் நாற்படை வளைத்துக் கொள்ளும் நிலையிலும், அப்படைகள் அதிர ஓடிப் பணிபுரியம் திறம்