பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7芝 - முல்லைப்பாட்டு

வாய்ந்த தேரில் அமர்ந்துவரும் அரசன், மேலும் விரைந்து போகவேண்டும் என எண்னவே, கோல் கொண்டு தாக்கிக், குதிரைகளை மேலும் துரத் தலாயினர். வள்ளியம் காடு முதலாம் காடுகள் எல்லாம் பின்னிட, குதிரைகள், காற்றெனக் கடுகி விரைந்து ஒடி, மனையை அடைந்து வருகையை அகத்துள்ளாள் அறிந்து மகிழும் வகையில், அருவியோசையில் தன் துயரை ஒரு வாறு மறந்து மயங்கிக் கிடந்தவள் காதுகள் கேட்டு அகமகிழ ஆரவாரக் குரல் எழுப்பி நின்றன.

அஞ்செவி நிறைய ஆலின வென்று பிறர் வேண்டு புலம் கவர்ந்த சண்டு பெரும் தான்ையொடு விசயம் வெல்கொடி உயர் வலன் ஏர்பு .. வயிரும் வளையும் ஆர்ப்ப, அயிர செறிஇலைக் காயா அஞ்சனம் மலர, முறி இணர்க் கொன்றை நன்பொன் காலக், கோடல் குவிமுகை அங்கை அவிழத், தோடு ஆர் தோன்றி குருதி பூப்பக்.

கானம் நந்திய செந்நிலைப் பெருவழி வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின் திரிமருப்பு இரலையொடு மடமான் உகள, எதிர்செல் வெண் மழை பொழியும் திங்களின் முதிர்காய் வள்ளியம்காடு பிறக்கு ஒழிய துணைபரி துரக்கும் செலவினர், வினை விளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே'

(89-10s)

(வென்று-போரில் வெற்றி கண்டு; பிறர் - பகை அரசர்கள் ; வேண்டுபுலம் - விரும்பும் அவர் நிலங்களை : கவர்ந்த - கைப்பற்றிக் கொண்ட, ஈண்டுபெரும் தான்ை யொடு - ஒன்று திரண்ட பெரிய படையோடு; விசயம்