பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனைநோக்கி மன்ன்வன் 73

வெல் கொடி உயரி - வெற்றியால் உயர்த்தப்பட்வெற்றிக் கொடி ஏந்தி; வலன் நேர்பு - பெற்ற வெற்றிக்குப் பொருந்த வயிரும் வளையும் ஆர்ப்ப - கொம்பும் சங்கும் முழங்க, அயிர - நுண்மணலிடத்தே வேர்விட்டிருக்கும்; செறி இலைக் காயா - நெருங்கின இலைகளைக் கொண்ட காயா ; அஞ்சனம் மலர அஞ்சனம் போல் மலரவும் ; முறி இணர்க் கொன்றை இளம் தளிர்களையும் மலர்க் கொத்துக்களையும் உடைய க்ொன்றை; நன்பொன்கால - நல்ல பொற்காசுகள் போலும் மலர்களைச் சொரியவும் ; கோடல் குவிமுகை - வெண்காந்தளின் மலரக் குவிந்த பேர் அரும்புகள் : அங்கை அவிழ அழகிய உள்ளங்கை போல் மலரவும் : தோடுஆர் தோன்றி-இதழ்கள் நிறைந்த தோன்றி: குருதி பூப்ப - உதிரம் போலும் செந்நிறம் வாய்ந்த மலர்களைப் பூப்பவும் : கானம் நந்திய - காடு செழித்த ; செந்நிலப் பெருவழி - செம்மண் பரவிய நிலத்தின் ஊடே செல்லும் பெருவழியில்; வானம் வாய்த்த மழையை வேண்டும் காலத்தில் வேண்டும் அளவே பெற்ற வாங்கு கதிர்வரகின் - பால் ஏறி மணிகள் முற்ற கனம் தாங்க மாட்டாது தலை சாய்ந்த கதிர்களைக் கொண்ட வரகுக் கொல்லையில் , திரிமருப்பு இரலையொடு - முறுக்குண்ட கொம்புகளையுடைய கலைமான்களோடு , மடமான் உகள - மடப்பத்தையுடைய மான்கூட்டம் துள்ளித் துள்ளி ஆடித் திளைக்க : எதிர்செல் வெண்மழை - இனிமேல் பெய்தற்குச் செல்லும் வெண்முகில் : பொழியும் திங்களில் - மழை பெய்யும் ஆவணித் திங்களில் ; முதிர்காய் - முற்றி முதிர்ந்ந பல்வேறு காய்களைக் கொண்ட ; வள்ளியம்காடு - வள்ளியங்காடு ; பிறக்கு ஒழிய - பின் ஆகும்படி ; துனை பரி - விரைந்து