பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

சென்றார். ஆற்றங்கரையில் கோயில் ஒன்று இருந்தது. அவரை வியாழக்கிழமையன்று சந்தித்தேன். அரசாங்க காஜியாருடன் என்னை அங்கு தங்கி இருக்குமாறு செய்தார். கூடாரங்கள் அமைக்கப்பட்ட பொழுது மக்கள் விழுந்தடித்து நெருக்கி ஓடி வந்ததைப் பார்த்தேன். அவர்களில் ஒருவன் சுல்தான் இறந்துவிட்டார் என்று சொன்னான். இன்னொருவன் அவரது மகன் இறந்துவிட்டார் என உறுதி கூறினான். விசாரணையின் பொழுது சுல்தானிள் இளவல் இறந்தது தெரியவந்தது. சுல்தானுக்கு வேறு மகன் இல்லை. அவருடைய நோயை இந்த இழப்பு மிகுதிப்படுத்தியது. அடுத்த வியாழக்கிழமை அவரது தாயார் இறந்தார். மூன்றாவது வியாழக்கிழமை சுல்தானும் இறந்துவிட்டார். ... [1]

அடுத்து, பட்டமேறிய சுல்தான் நசிருத்தீன் பற்றி, இபுன் பதூதா,[2]

".... ... .... நாஸிருத்தீன் , இறந்து போன சுல்தானின் ஒன்று விட்ட சகோதரர். தில்லியில் அலுவலராக இருந்தவர். கியாசுதின், சுல்தான் ஆனவுடன் நாஸிருத்தீன் பயந்து பிச்சைக்கார வேடத்தில் ஒடிப்போனார். ஆனால் அவரது ஒன்று விட்ட சகோதரருக்கு பின்னர், அவர் ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது விதியின் விளையாட்டு. நாஸிருத்தீன் அரியணையேறியவுடன் அவர்கள் விசுவாசப் பிரமாணம் செய்தனர். கவிகள் புகழ் மாலைகளைச் சூட்டினர். அவர்களுக்கு சிறந்த பரிசில்களை அவர் வழங்கினார். முதலில் எழுந்து அவருக்கு வாழ்த்துக் கூறியவர் காஜிஸ்த்ரூஸ்ஜமான். அவருக்கு வாழ்த்துக்கு ஐநூறு பொற்காசுகளையும், சீருடைகளையும் சுல்தான் வழங்கினார். அடுத்து வந்தவர், நீதவான் வஜீர்-அல்-காஜி, அவருக்கு சுல்தான் இரண்டாயிரம் வெள்ளிக்காசுகளை வழங்கினார். எனக்கு முன்னுாறு பொற்காசுகளையும், சீருடையையும் கொடுத்தார். பக்கிரிகளுக்கும் ஏழைகளுக்கும் தானம் வழங்கினார். முதன்முறையாக, போதகர் ஒருவர் புதிய ஆட்சியாளரின் பெயரை இணைத்து முதல் பிரசங்கம் செய்தவுடன், பொன், வெள்ளி தட்டில்களிலி


  1. Ibid p. 252
  2. Ibid p. 282, 283