பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

மத்து கி.பி. 1567ம் ஆண்டு கல்வெட்டிலும் "சம்மாட்டி" என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.[1] எதிர்க்கரையான ஈழத்தில் வணிகர்களைக் குறிக்க "சம்மாங்காரர்" என்ற வழக்கு உள்ளது. சம்மாந்துறை” என்ற ஊரும் அங்கு கிழக்கு மாகாணத்தில் உள்ளது. மலேசியா மொழியிலும், வணிகர்கள் “ஹம்மங்கராய" என்ற மூன்று சொற்களுக்கும் வணிகம் என்ற பொருளில் தொடர்பு உள்ளது[2] . காரணம் இந்த நாடுகளுடன் தமிழக இஸ்லாமியர்கள் வணிக தொடர்புகளுடன் மண உறவுகளும் கொண்டிருந்தது, இதற்கு காரணமாக இருக்கலாம். இந்த இஸ்லாமியர், ஈழத்தில் "மரிக்கார்" என்ற பிரிவினராக வழங்கப்படுகின்றனர். ஆனால், பர்மா, மலேஷியா நாடுகளில் இவர்கள் "சோழிய முஸ்லீம்கள்" என்று அழைக்கப்படுகின்றனர். பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், தமிழகம் முழுதும் சோழர்களது செங்கொற்றக் குடையின் கீழ் இருந்ததால் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை முழுவதும் சோழ மண்டலக் கரை என்றே குறிக்கப்படடது. (இந்தச் சொல்லை பிற்கால ஆங்கிலேயரும், சோழ மண்டலக் கரை முழுவதையும் "கோரமாண்டல் கோலட்” எனப்பெயரிட்டு அழைத்தனர்). இந்தக் கரையினின்றும் அந்த நாடுகளுக்குச் சென்று குடியேறிய முஸ்லீம்கள் என்ற காரணத்தினால் "சோழிய" (சோழ நாட்டு) என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது. ரங்கூனிலும் (பர்மா) பினாங்கிலும் (மலேஷியா)சோழிய முஸ்லிம் பள்ளிகளும், சங்கங்களும், வீதிகளும் இருந்து வருவது இங்கு குறிப்பிட்த்தக்கது.

மரைக்காயர் பற்றிய விவரங்களைக் குறிப்பிடும் பொழுது மரைக்காயரில் பதினேழாவது நூற்றாண்டின் பிற்பகுதியில், செம்மாந்து நின்ற சீதக்காதியின் புகழ்வடிவு நம் மனத்திரையில் வரைபடமாக வளர்த்தோங்கி விளங்குகிறது. கீழக்கரையை தாயகமாகக் கொண்ட வள்ளல் ஷெய்கு அப்துல் காதிறு மரைக்காயர் அவர்கள் தம்மை நாடி வந்தவர்களுக்கு, பொன்னும் பொருளும், ஈந்து தமிழ் வள்ளல்கள் வழியிலே தமிழ் மரபு காத்தார். எழுவானையும் தொடுவானையும் தொடர்ந்து சென்ற அவரது நாவாய்கள், சுமந்து வந்த செல்வ மனைத்தும்


  1. A.R. 392/1914 - (பரமக்குடி)
  2. A.R. 324 / 1912 - (திர்ஷணப்பள்ளி)