பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


9

வணிகம் வந்த வழியில்


தமிழகத்திற்கும் அரபு நாடுகளுக்கும் வாணிப பண்டமாற்றிற்குப் பயன்பட்ட பாய்மரக்கலங்கள், அராபிய இஸ்லாமியர் தமிழகத்திற்கு வந்து செல்லும் போக்குவரத்துச் சாதனமாகவும் பயன்பட்டன. இன்றைய குமரி மாவட்ட குளச்சலிலிருந்து ஆந்திரக் கரையில் உள்ள முத்துப்பள்ளி வரையான வங்கக் கடலின் விரிந்த கடற்கரையில் பல இடங்களில் அவர்களது கலங்கள் நங்கூரமிடப்பட்டு நின்றன. இந்தப்பகுதி அரபு மொழியில் மாபார் என அழைக்கப்பட்டது.[1] கடந்து செல்லும் பகுதி என்ற பொருளுடைய இந்தப்பகுதி, நாளடைவில் அவர்கள் விரும்பி வாழும் நாடாக மாறியது வியப்பிற்குரியது அவர்களது கலங்களில் ரோம, எகிப்து, பாரசீக நாட்டுப் பண்டங்களுடன், குதிரைகளும், கரை இறக்கப்பட்டதுடன் நீண்ட அங்கியும் வண்ண முண்டாசுகளும் அணிந்த, இனிய தோற்றமுடைய இஸ்லாமியத் துறவிகளும், தொண்டர்களும், கரை இறங்கும் காட்சி, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழக கடற்கரைப் பட்டினங்களில் ஆங்காங்கே காணக்கூடியதாக இருந்தது.

ஏற்கனவே, தமிழ்ச் சமுதாயத்திற்கு அறிமுகமாகி, அஞ்சுவண்ணங்களில் வணிகச்சாத்துக்களுடள் நிலைத்துவிட்ட அராபிய இஸ்லாமியர்களது நேர்மையான வணிகத்திலும், வாழ்க்கை நெறிகளிலும் ஈர்க்கப்பட்டிருந்த தமிழ் மக்கள், இந்த இஸ்லாமிய துறவி - தொண்டர்களது பேச்சிற்கு தங்கள் செவிகளைத்


  1. Mohammed Hussain Nainar Dr. — Arab Geographers Knowledge on South India (1642) p. 19.