பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

இந்த நிகழ்ச்சி சாலிவாகன சகாப்தம் இன்ன வருடம், இன்ன மாதம் இன்ன நாளில் என்று மட்டும் குறிப்பிடாமல் "கொல்லம் அழிந்த 227 ஆண்டுகளுக்குப் பிறகு" என்று விளக்கம் கொடுப்பதிலிருந்து இஸ்லாமியர்கள் மதுரையைக் கைப்பற்றிய இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக இஸ்லாமியர்கள் கொல்லத்தைக் கைப்பற்றி இருந்தனர் என்பதை சூசகமாகக் குறிப்பிடும் நோக்கத்துடன் தான் "கொல்லம் அழிந்த 227 ஆண்டுகளுக்குப் பிறகு" என்ற தொடரும் இந்த வரலாற்றுக் குறிப்பிலே சேர்க்கப்பட்டுள்ளது.[1] பாண்டிய மன்னர்களது தலைநகரான மதுரையில் இஸ்லாமியர்களது செல்வாக்கு அரசியலில் மிகுந்து வந்தது. கி. பி. 1182 இல் மதினத்திலிருந்து பாண்டிய நாடு வந்த இஸ்லாமியப் பிாச்சாரகரான புனித ஸையது இபுராஹீம் (ஷஹீது) அவர்கட்கு கொற்கையில் ஆட்சி புரிந்த குலசேகா பாண்டியன் எல்லா வசதிகளையும் வழங்கியதுடன், தனது ஆட்சிக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருந்த தனது தாயாதிகளை அடக்குவதற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டான். இதனை அறிந்த மன்னன் திருப்பாண்டியன், அஞ்சியவனாக மதுரையை விட்டே ஓடிவிட்டான். புனிதர் சையது இபுராகீம் அவர்களது தொண்டர்கள் மதுரையைக் கைப்பற்றினர். மதுரைக் கோட்டையும் அதன் சுற்றுவட்டாரத்து சீமையும் தளபதி அமீர் இஸ்கந்தர் என்பவரது நிர்வாகத்தில் பல ஆண்டுகள் இருந்து வந்தன.[2] திருப்பரங்குன்ற மலையின் உச்சியில் உள்ள பள்ளியின் பக்கத்தில் இவரது அடக்க இடம் அமைந்துள்ள காரணத்தினால் மக்கள் அந்த மலையை சிக்கந்தர் மலை யென்றும், அங்குள்ள பள்ளியை சிக்கந்தர் பள்ளி என்றும் வழங்கி வருகின்றனர். ஆனால் வரலாற்று நூலாசிரியர் டாக்டர் ஹீசைனி, மதுரை சுல்த்தான்களில் இறுதியாக கி.பி. 1372-73ல் அரியணை ஏறிய விஜய நகர இளவல் குமார கம்பனனால் கொல்லப்பட்டவருமான சுல்தான் சிக்கந்தர் ஷாவின் அடக்கவிடம் அது என குறித்துள்ளார்.[3] இந்த அடக்கவிடத்தை கி.பி. 1762 ல், மதுரை ஆளுநராக இருந்த கம்மந்தான் கான்சாகிபு


  1. சுப்பிரமணியன் க.நா. - தென்னிந்திய கோயில் சாசனங்கள் பகுதி 2 பக். 77. தொகுதி III
  2. முகமது இப்ராஹிம் லெப்பை-ஷஹீது சரிதை (1953)
  3. Hussaini.Dr.S.A.O – History of Pamdia country (1963) p.p.111